Posts

Showing posts from September, 2017

சங்கத்தமிழில் வாமன அவதாரம்- 47

Image
சங்கத்தமிழ்_ காட்டும்_சனாதனதர்மம்- 47 சங்கப்பாடல்களில் பல்வேறு இடங்களில் திருமால் போற்றப்படுகிறார். இதில் வாமன அவதாரக் குறிப்பும் உண்டு. முல்லைப்பாட்டு (1-3) நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்த மாஅல் போல தனது பெரிய கரங்களில் சங்கும், சக்கரமும் உடையவனாகிய திருமால் அன்றொருநாள் மஹாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு வந்து , தானமாகப் பெற கையில் தாரை நீரை வாங்கிக் கொண்டே... தனது குள்ள உருவிலிருந்து ப்ரமாண்டமாக த்ரிவிக்ரமனாக  வளர்ந்தார். அவரைப் போல கடலிலிருந்து நீரை உறிந்து கொண்டு வானத்தில் மழை மேகங்கள் எழுந்தன. இப்பாடல் மூலம்  வாமன அவதார நிகழ்வானது பண்டைய தமிழர் அறிந்து , பதிவு செய்துள்ளனர் என்பதை அறியலாம். இதே புராணச் செய்தியைத் திருவள்ளுவரும் பதிவு செய்கிறார். மடியிலா மன்னவன் எய்தும்டி அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. அதாவது சோம்பல் இல்லாத முயற்சியை உடைய அரசன் 'வாமனனாய் வந்து த்ரிவிக்ரமனாக வளர்ந்து' உலகளந்த உத்தமன் திருமால் தன் திருவடிகளால் அளந்த மூவுலகையும் கைப்பற்றுவான் என்கிறார். ஆக, திருமா