Posts

Showing posts from July, 2025

மனுவும் குறளும்

Image
 மனுவும் குறளும் மனுஸ்ம்ருத்தி அத்யாயம் 5  தன் சுகத்திற்காக எவன் யாவருக்கும் உபத்திரவஞ் செய்யாத மான் முதலிய ஜந்துக்களுக்கு ஹிம்சை செய்கிறானோ அவன் இம்மையிலும், மறுமையிலும் சுகம் பெறமாட்டான்! இதன் தாக்கம் இக்குறளில் உள்ளது... தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள் (அதிகாரம்:புலால்மறுத்தல் குறள் எண்:251) மனு : எவன் எந்த ஜெந்துவையும் கட்டாமல், கொல்லாமல், வருத்தாமலும் உள்ளானோ அவன் சகலஜன மித்ரனாக (அனைத்து உயிர்களுக்கும் நல்லவனாக) சுகங்களும் பெறுவார்! இதன் தாக்கம் குறள் 260 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். மனுஸ்ம்ருத்தி அத்யாயம் 5 நூறு வருஷம் அஸ்வமேத யாகம் செய்தவனும் வாழும் காலம் வரை மாமிசம் உண்ணாதவனும் ஒரே உயர்வான பலனையே அடைவர்!   இதன் தாக்கமே திருக்குறள் 259 அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற னுயிர்செகுத் துண்ணாமை நன்று. ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் புலால் உண்ணாமையால் வரும் நன்மை பெரியது!   ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்தால் இந்திரப் பதவி கிட்டும் என்பது சாஸ்திரம்... அந்த பலனை புலான் மறுத்தல் தரும் என்பதே மனு ஸ்ல...