சங்கத்தமிழில் உலகத் தோற்றம்-19
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-19 உலகின் தோற்றமும் ஒடுக்கமும் பற்றிய விஞ்ஞானப் பார்வை மெய்ஞ்ஞானத்தின் வடிவில். Bigbang theory illustrated in Tamil sangam literature- paripadal பாடல்:- தீசெங் கனலியும் கூற்றமும் ஞமனும் மாசில்ஆ யிரங்கதிர் ஞாயிறும் தொகூஉம் ஊழி ஆழிக்கண் இருநிலம் உருகெழு கேழாய் மருப்பின் உழுதோய் எனவும் மாவிசும்பு ஒழுகுபுனல் வறள அன்னச் சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய் எனுவும் ஞாலத்து உரையுந் தேவரும் வானத்து நாலெண் தேவரும் நயந்துநிற் பாடுவோர் பாடும் வகையே எம்பாடல் தாமப் பாடுவார் பாடும் வகை! பரிபாடல் 25-30. பொருள்:- இந்த அண்டமானது அழியும் #ஊழிக்காலத்தில் எல்லாவற்றையும் தன்னுள் ஒடுக்கும் பெருநெருப்பாக இருப்பவனே, திருமாலே, ஆயிரம் கதிருடைய சூரியனும் நீயே, உயிர்களுக்கு விதியாக இருப்பவனே! இவ்வுழிக்கால்ததில் பூமியைப் பன்றி (வராஹ அவதாரம் ) உருவெடுத்து வெள்ளத்திலிருந்து மீட்டவனே!! பெருமழையால் ஆழி சூழ்ந்த உலகை அன்னப்பறவையின் உருவெடுத்து சிறகால் காத்தவனே! நின்னை அனைத்து தேவாதி தேவர்களும் தொழுது வணங்குகின்றனர்.அடியனும் உன்னை அவ்வாறே வணங்