எது தமிழர் பண்டிகை?
எது தமிழர் பண்டிகை? இதற்கான அளவீடு தமிழர்கள் மட்டுமே (வடநாட்டுக்காரர்கள் கொண்டாடாத) கொண்டாடுகிற பண்டிகை என்பதல்ல... சங்கக்காலத்திலிருந்தோ அல்லது குறைந்தபட்சம் ஆயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தோ தமிழ் மண்ணில் கொண்டாடப்படும் பண்டிகைகள் என்பதே ஆகும். உதாரணமாக பழந்தமிழர் சந்திர நாள்காட்டியையே பயன்படுத்தினர், அதன்படி பௌர்ணமியே மாதப் பிறப்பு, எல்லா பௌர்ணமியும் விழா நடைபெற்றது. அதன்படி பார்த்தால் 'தமிழர் திருநாள்' என்று கூறப்படும் பொங்கல் வெறும் 1000 வருட வரலாறே உடையது. சோழர்கள் சூர்ய நாள்காட்டியையே அறிமுகம் செய்த பின்பு தான் தைப் பொங்கல். அதுவும் வடக்கில் 'மகர சங்கராந்தி'. தைப் பூசமே சோழர்கள் சூர்ய நாட்காட்டி கொண்டு வரும் முன் வரை தை - 1. தை நீராடல் என்பது சங்கக்காலத் தமிழ் பாரம்பரியம்.. இன்றும் வடநாட்டில் 'பௌஷ்ய பூர்ணிமா' எனும் பெயரில் தைப்பூசத்தன்று புண்ணிய நதிகளில் நீராடுகின்றனர். தமிழருக்குப் பண்டிகை நாட்கள் பெரும்பாலும் பௌர்ணமியே.. அதன்படி.. மாசி மாதம் வரும் பௌர்ணமியே நாம் கொண்டாடும் மாசி மகம், இதை வடநாட்டில் கும்ப மேளாவாகக் கொண்டாடுகின்றனர். உல