எது தமிழர் பண்டிகை?
எது தமிழர் பண்டிகை?
இதற்கான அளவீடு தமிழர்கள் மட்டுமே (வடநாட்டுக்காரர்கள் கொண்டாடாத) கொண்டாடுகிற பண்டிகை என்பதல்ல... சங்கக்காலத்திலிருந்தோ அல்லது குறைந்தபட்சம் ஆயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தோ தமிழ் மண்ணில் கொண்டாடப்படும் பண்டிகைகள் என்பதே ஆகும்.
உதாரணமாக பழந்தமிழர் சந்திர நாள்காட்டியையே பயன்படுத்தினர், அதன்படி
பௌர்ணமியே மாதப் பிறப்பு, எல்லா பௌர்ணமியும் விழா நடைபெற்றது.
அதன்படி பார்த்தால் 'தமிழர் திருநாள்' என்று கூறப்படும் பொங்கல் வெறும் 1000 வருட வரலாறே உடையது. சோழர்கள் சூர்ய நாள்காட்டியையே அறிமுகம் செய்த பின்பு தான் தைப் பொங்கல். அதுவும் வடக்கில் 'மகர சங்கராந்தி'.
தைப் பூசமே சோழர்கள் சூர்ய நாட்காட்டி கொண்டு வரும் முன் வரை தை - 1. தை நீராடல் என்பது சங்கக்காலத் தமிழ் பாரம்பரியம்.. இன்றும் வடநாட்டில் 'பௌஷ்ய பூர்ணிமா' எனும் பெயரில் தைப்பூசத்தன்று புண்ணிய நதிகளில் நீராடுகின்றனர்.
தமிழருக்குப் பண்டிகை நாட்கள் பெரும்பாலும் பௌர்ணமியே.. அதன்படி..
மாசி மாதம் வரும் பௌர்ணமியே நாம் கொண்டாடும் மாசி மகம்,
இதை வடநாட்டில் கும்ப மேளாவாகக் கொண்டாடுகின்றனர். உலகின் மிகப் பெரிய திருவிழா இதுவே.
பங்குனி உத்ரம் என்பதை சங்கக்காலத்தில் பங்குனி முயக்கம் என்ற பெயரில் 'காமன் பண்டிகை' எடுத்தனர். இதுவே இன்றும் வடநாட்டில் பல்குன பூர்ணிமா என்று 'ஹோலி' பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.
சித்திரை தமிழ் வருடப் பிறப்பு சோழர்களால் உருவாக்கப்பட்டது...
கேரளாவில் விஷூ (vishu)
வட பாரதத்தில், சீக்கியர்களுக்கு வைஷாகி (vaishaki)
ஒரிசாவில் விஷ்வ ஸங்கராந்தி (vishwa sankaranthi)
வங்காளத்திலும், வங்கதேசத்திலும் பொஹேளா பொய்ஷாக் (pohela boishakh)
அசாமில் ரங்காலி பிஹு (rongali bihu)
நேபாளத்தில் பிக்ரம் ஸம்வத் (bikram sanwat)
இலங்கையில் அலூத் அவ்ருத்து (aluth avuruthu)
பர்மாவில் திங்க்யான் (thingyan)
லாவோஸ் நாட்டில்
சோங்கான், பி மாய் லாவோ (songkan/ pi mai lao)
கம்போடியாவில் சோள் சிநாம் த்மேய் (chol chnam thmey)
தாய்லாந்தில் ஸங்க்ரான் (songkran)
வைகாசி விசாகம்
வைகாசி மாதம் வரும் பௌர்ணமியே தமிழருக்கு வைகாசி விசாகம், வடநாட்டில் அதையே புத்த பூர்ணிமாவாகவும், கூர்ம ஜெயந்தியாகவும்(திருமால் கூர்ம அவதாரம் எடுத்த நாள்) கொண்டாடுகின்றனர்.
ஆவணி பௌர்ணமியே திருவோணம் (வாமன ஜெயந்தி- திருமால் வாமன அவதாரம் எடுத்த நாள்) சங்கக்காலத்தில் பாண்டிய நாட்டில் மிக முக்கியமான பண்டிகையாக இருந்தது, இன்று கேரளாவில் ஓணமாகவும், வடநாட்டில் 'ரக்ஷா பந்தனாகவும்' கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதம் இங்கு திருக்கார்த்திகை. காசியில் தேவ தீபாவளி, திருமாலின் மத்ஸ்ய அவதாரம் தினம், சிவபெருமான் திரிபுரம் எரித்த தினம் என்று பல்வேறு காரணங்களுக்காக வடபாரதத்தில் கார்த்திகை கொண்டாடப் படுகின்றது
தமிழர்கள் மட்டுமே கொண்டாடும் விழா எதுவுமே இல்லை, இந்தியா முழுவதும் ஒன்று போல் தான் எல்லா பண்டிகைகளும் உள்ளன.
சூர்ய, சந்திர நாள்காட்டிகளால் சிறிய வேறுபாடுகள் உண்டு, தவிர பண்டிகை கொண்டாடும் காரணங்கள் மாறுகின்றன.
இந்த ஒருமைப்பாட்டுக்குக் காரணங்கள் பல. இப்பண்டிகைகள் அனைத்தும் தமிழர்கள் மற்ற மாநிலத்தவரோடு இணைந்து கொண்டாட வேண்டும்.
தமிழனுக்குத் தனித்துவம் கற்பிக்கிறேன் எனும் பெயரில் இவை அனைத்தும் ஆரிய பண்டிகை என்று முத்திரை குத்தி ஒதுக்கினால்... அவர்களை விட மிகப் பெரிய தமிழ் துரோகி இருக்க மாட்டார்கள்.
ஆக, வெறுமனே தமிழ் தமிழ் என்று கூப்பாடு போடாமல் மேற்கண்ட தமிழ் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்க ஏற்பாடு செய்து, தங்களைத் தமிழர் என்று கூறிக் கொள்ளும் மாற்று மதத்தினரையும் இணைத்துக் கொண்டு கொண்டாடுவோம்.

நல்ல பதிவு
ReplyDeleteஅருமை..! தொடரவும்...
ReplyDeleteமிக்க நன்றி ஜி...
ReplyDeleteஇமயமலை வரை திராவிட நாடு ஆகும்
ReplyDeleteதிராவிட நாடு என்கிற ஒரு உண்மையையும் பேச வேண்டும் அதே நேரத்தில் தென் இந்தியாமட்டுமே திராவிடம் வட இந்தியர் ஆரியர் என்றொரு பொய்யையும் கலந்து பேசினால் எளிதாக மக்களை திசை திருப்பி விடலாம் என அண்ணாத்துரைக்கு சி ஐ ஏ சொல்லிக்கொடுத்த தந்திரம் எளிதாக வெற்றி பெற்று தமிழகத்தை இந்தியாவோடு ஓட்ட விடாமல் தடுத்தது
இப்போது அதே போல ஆன்மிகம் போலவும் இருக்கவேண்டும் ஆனால் தப்புதப்பாக பொய்யை அதில் கலந்து விடவேண்டும் என சீமானை தயார் செய்வதும் சி ஐ ஏ தான்
கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தை பெரிய அளவில் கெடுக்க உள்ள மாயை சீமானே ஆகும்
அடக்கொடுமையே பாரத நாடு பழந்தமிழர் நாடு அதை நாடு என்று பாரதி சொல்லிட்டு ஏன் காத சுத்தி ஏன் முன்டாசு கட்டினாருனு இப்ப தான் புரியுது.
DeleteNice
ReplyDelete