தமிழ் இலக்கியங்களில் ராமபிரான்
தமிழ் இலக்கியங்களில் ராமபிரான் தொல்காப்பியம் காட்டும் முதல் தெய்வம் மாயோனாகிய திருமாலே ஆவார். மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே - தொல்காப்பியம் பொருள்.அகத் 5 தமிழரின் முதல் தெய்வமான மாயோனின் அவதாரமான ஸ்ரீ ராமபிரான் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகளைக் காண்போம். அகநானூறு நெய்தல் நில நகரம் எவ்வாறு அமைதியடைந்தது என்பதைக் கூற வந்த சங்கப்புலவர் அதற்கு தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த இராமாயணத்தில் இருந்து ஒரு காட்சியை உவமிக்கிறார் . வென்வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே (அகநானூறு 70: 13-17). அதாவது பாண்டியர்களுக்குரிய சேதுக்கரையில் அமர்ந்து ஸ்ரீராமன் இலங்கை மீது படையெடுப்பது குறித்த போர் யூகங்களைத் தன் வானர சேனைகளுடன் ஆலமரத்திற்கு அடியில் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு