Posts

Showing posts from May, 2023

கழகம் தமிழ்ச் சொல்லா?

Image
 கழகம் தமிழ்ச் சொல்லா? சங்கம் என்பது வடமொழிச் சொல் என்பதால், அதைத் தவிர்க்கும் பொருட்ட அதே பொருளுடைய கழகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்சொல்லின் மூலம் ஆய்வுக்குறியது. இது பற்றி தமிழ் ஆய்வாளர் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இக்கட்டுரையை அவரது தொகுப்பு நூலான தமிழின் மறுமலர்ச்சி நூலில் படிக்க நேர்ந்தது.  பொதுவாக ழகரம் வந்தாலோ, அல்லது நீண்ட காலமாகத் தமிழில் படன்படுத்தப்பட்டு வந்தாலோ அதைத் தமிழ்ச் சொல் என்றே முடிவு கட்டி விடுகிறோம். ஆனால் அது சரியானதல்ல என்று சொல்வது போல் இக்கட்டுரை அமைந்துள்ளது.  கட்டுரை  // கழகம் இக்காலத்தே கல்வியோடு நெருங்கிய தொடர்புள்ளதாகக் கழகம் வழங்குகிறது. இச்சொல் திருக்குறளில், கவறுங் கழகமுங் கையுந் தருக்கி இவறியார் இல்லாகி யார். (935) என வந்துள்ளது. 'கழகமாக ஏகவின்பக் காமக் கவறாடல் இயைவதன்றே' எனச் சிந்தாமணியில் (1657) உள்ளது. ஓதுசாலையும் சூதாடு கழகமும், என்பது பெருங்கதை (II, 7,132). தவலில்தண் கழகத்துத்  தவிராது வட்டிப்பக்  கவறுற்ற வடுவேய்க்குங்  காமர்பூங் கடற்சேர்ப்ப, எனக் கலித்தொ கையில் (136) பயின்றுள்ளது.  இதுவே இச