Posts

Showing posts from August, 2025

தமிழரசர் பின்பற்றியது மனு ஸ்ம்ருதியா, திருக்குறளா?

Image
தமிழரசர்கள் மனுஸ்ம்ருத்தி காட்டிய வழியில் நடந்ததாகவே அவர்கள் மெய்க்கீர்த்திகளில் சொல்கிறார்கள். மனுநீதி, மனுநெறி என்பது விஜயநகர காலத்தில் வந்தது அல்ல. காலம் காலமாகத் தமிழர்கள் பின்பற்றியதே ஆகும்.  எந்தத் தமிழரசரும் திருக்குறளைப் பின்பற்றியதாகத் தம் மெய்க்கீர்த்தியில் சொல்லவில்லை‌.  சோழர் மெய்க்கீர்த்தி  1) முதலாம் இராசாதிராசன் (கி. பி 1018 - 1054) ஆறிலொன்று அவனியுள் கூறுகொள் பொருள்களும் உகந்துநான் மறையவர் முகந்துகொளக் கொடுத்து விசுவலோகத்து விளங்க மனுநெறி நின்று அஸ்வமேத யாகஞ்செய் தரசுவீற் றிருந்த சயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ் 2) இராசமகேந்திரன் (கி. பி 1060-1063) ஸ்வஸ்திஸ்ரீ  திருமகள் விளங்க இருநில மடந்தையை ஒருகுடை நிழற்கீழ் இனிதுநிற்பப் புணர்ந்து தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்திய 3) வீரஇராஜேந்திரன் (கி. பி 1063 - 1070) உரிமை யில்எய்தி யரசு வீற்றிருந்து மேவரு மனுநெறி விளக்கிய கோவிராச கேசரி வனம ரான உடையார் ஸரீவீரராசேந்திர தேவர்க்கு யாண்டு 4) குலோத்துங்கன் III. (கி. பி 1178 - 1218 )  ஸ்வஸ்திஸ்ரீ  புயல்வாய்த்து வளம்பெருகப் பொய்யாத நான்மறையின் செயல்வாய்த்துத்...