தமிழரசர் பின்பற்றியது மனு ஸ்ம்ருதியா, திருக்குறளா?

தமிழரசர்கள் மனுஸ்ம்ருத்தி காட்டிய வழியில் நடந்ததாகவே அவர்கள் மெய்க்கீர்த்திகளில் சொல்கிறார்கள். மனுநீதி, மனுநெறி என்பது விஜயநகர காலத்தில் வந்தது அல்ல. காலம் காலமாகத் தமிழர்கள் பின்பற்றியதே ஆகும். 

எந்தத் தமிழரசரும் திருக்குறளைப் பின்பற்றியதாகத் தம் மெய்க்கீர்த்தியில் சொல்லவில்லை‌. 


சோழர் மெய்க்கீர்த்தி 

1) முதலாம் இராசாதிராசன் (கி. பி 1018 - 1054)

ஆறிலொன்று அவனியுள் கூறுகொள் பொருள்களும்

உகந்துநான் மறையவர் முகந்துகொளக் கொடுத்து

விசுவலோகத்து விளங்க மனுநெறி நின்று

அஸ்வமேத யாகஞ்செய் தரசுவீற் றிருந்த

சயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ்


2) இராசமகேந்திரன் (கி. பி 1060-1063)

ஸ்வஸ்திஸ்ரீ 

திருமகள் விளங்க இருநில மடந்தையை

ஒருகுடை நிழற்கீழ் இனிதுநிற்பப் புணர்ந்து

தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்திய


3) வீரஇராஜேந்திரன் (கி. பி 1063 - 1070)

உரிமை யில்எய்தி யரசு வீற்றிருந்து

மேவரு மனுநெறி விளக்கிய

கோவிராச கேசரி வனம ரான

உடையார் ஸரீவீரராசேந்திர தேவர்க்கு யாண்டு


4) குலோத்துங்கன் III. (கி. பி 1178 - 1218 ) 

ஸ்வஸ்திஸ்ரீ 

புயல்வாய்த்து வளம்பெருகப் பொய்யாத நான்மறையின்

செயல்வாய்த்துத் திருமகளும் செயமகளும் சிறந்துவாழ

வெண்மதிபோற் குடைவிளங்க வேல்வேந்தர் அடிவணங்க

மண்மடந்தை மனங்களிப்ப மனுநீதி தழைத்தோங்கச்


5) வீரஇராஜேந்திரன் (கி. பி 1063 - 1070) 

ஸ்வஸ்திஸ்ரீ

புயல்வாய்த்து வளம்பெருகப் பொய்யாத நான்மறையின்

செயல்வாய்ப்பத் திருமகளும் சயமகளும் சிறந்துவாழ

வெண்மதிபோல் குடைவிளங்க வேலவேந்தர் அடிவணங்க

மண்மடந்தை மனங்களிப்ப மனுநீதி தழைத்தோங்க....






பாண்டியரும் மனுநீதியும்



சோழர்களைப் போலவே பாண்டியர்கள் மனுநீதி விளங்க ஆட்சி செய்ததாக அவர்களது மெய்கீர்த்தி சொல்கின்றது!



1) 'மறைநெறி வளர மனுநெறி திகழ' -

சடையவர்மன் குலசேகர பாண்டியன் - காலம் (பொ.ஆ.1190 - 1218) மெய்கீர்த்தி! (பொ.ஆ - பொது ஆண்டு அதாவது கி.பி) 


2) 'பனிமலர்த் தாமரை திசைமுகன் படைத்த மனுநெறி தழைப்ப மணிமுடி சூடி' - மாறவர்மன் சுந்தர பாண்டியன் ( பொ.ஆ. 1215 - 1239) மெய்கீர்த்தி!


3) 'அருந்தமிழும் ஆரியமு அறுசமயத் தறநெறியும்

திருந்துகின்ற மனுநெறியுந் திறம்பாது தழைத்தோங்க' - சடையவர்மன் சுந்தர பாண்டியன் (பொ.ஆ.1252 - 1271) மெய்கீர்த்தி!


4) 'முத்தமிழும் மனுநூலும் நால்மறை முழுவதும்' - மாறவர்மன் குலசேகர பாண்டியன் (பொ.ஆ. 1268 - 1285) மெய்கீரத்தி!


நம் தமிழரசர்களால் போற்றபட்டது மனுநீதியே ஆகும்!


பதிவு - விஷ்ணு சர்மா


Comments

Popular posts from this blog

தமிழரின் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டா?

மாயோன்

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்