தெய்வீகப் பாண்டியர்கள்
தெய்வீகப் பாண்டியர்கள் #மாயோன் வழிவந்த சந்திர குலத்தவர்கள் பாண்டியர்கள் "இரண்டாம் ராஜசிம்மன் பாண்டியன்(கிபி741) சின்னமானூர் கல்வெட்டு" கல்வெட்டு விவரம்: " திருவொடு தெள்ளமிர்தத்தோடு; செங்கதிரொளி கௌஸ்து பத்தொடும் அருவிமதக் களிற்றொடு தோன்றி;அரன்அவிர்சடைமுடி வீற்றிருந்த வெண்திங்கள் முதலாக வெளிப்பட்டது; நாற்றிசையோர் புகழ் நீரது; பாரத்துவாஜிகளால் நேரே ஸ்துதிக்கப்பட்டது;;விரவலர்க்கரியது;மீனத்துவ சாசனத்து ;பெருவளர் சீர் "அகத்தியனைப் புரோகிதனாகப் பெற்றது"; ஊழியூழிதோரும் உள்ள நின்ற. ஒருவனை உடையது வாழிய பாண்டியர்" பொருள்: திருவாகிய லக்ஷ்மியோடும், அமிர்தத்தோடும், செம்மையான கதிரவனைப் போன்ற ஒளி உடைய கௌஸ்துப மணியோடும், மதக் களிறாகிய ஐராவதத்தோடும், சிவபெருமானால் அணியப்படும் சந்திரன் தோன்றினான்.. அந்தச் சந்திரனிலிருந்து தோன்றியதும், நான்கு திசையும் புகழ் உடையதும், வெல்வதற்கரியதும், மீன் கொடியை உடையதும், அகஸ்திய முனிவரைத் தன் ராஜகுருவாக, ப்ரோகிதராகக் கொண்டதுமான சிறப்பை உடையதுமான பாண்டியர் குலம் வாழ்கவே! விளக்கம் - விஷ்ண