தெய்வீகப் பாண்டியர்கள்
தெய்வீகப் பாண்டியர்கள்
#மாயோன் வழிவந்த சந்திர குலத்தவர்கள் பாண்டியர்கள்
"இரண்டாம் ராஜசிம்மன் பாண்டியன்(கிபி741) சின்னமானூர் கல்வெட்டு"
கல்வெட்டு விவரம்:
" திருவொடு தெள்ளமிர்தத்தோடு; செங்கதிரொளி கௌஸ்து பத்தொடும் அருவிமதக் களிற்றொடு தோன்றி;அரன்அவிர்சடைமுடி வீற்றிருந்த வெண்திங்கள் முதலாக வெளிப்பட்டது; நாற்றிசையோர் புகழ் நீரது; பாரத்துவாஜிகளால் நேரே ஸ்துதிக்கப்பட்டது;;விரவலர்க்கரியது;மீனத்துவ சாசனத்து ;பெருவளர் சீர் "அகத்தியனைப் புரோகிதனாகப் பெற்றது"; ஊழியூழிதோரும் உள்ள நின்ற. ஒருவனை உடையது வாழிய பாண்டியர்"
பொருள்:
திருவாகிய லக்ஷ்மியோடும், அமிர்தத்தோடும், செம்மையான கதிரவனைப் போன்ற ஒளி உடைய கௌஸ்துப மணியோடும், மதக் களிறாகிய ஐராவதத்தோடும், சிவபெருமானால் அணியப்படும் சந்திரன் தோன்றினான்.. அந்தச் சந்திரனிலிருந்து தோன்றியதும்,
நான்கு திசையும் புகழ் உடையதும், வெல்வதற்கரியதும், மீன் கொடியை உடையதும், அகஸ்திய முனிவரைத் தன் ராஜகுருவாக, ப்ரோகிதராகக் கொண்டதுமான சிறப்பை உடையதுமான பாண்டியர் குலம் வாழ்கவே!

விளக்கம் -
விஷ்ணு புராணத்தின் படி
தேவரும், அசுரரும் பாற்கடலைக் கடையும் போது மந்தர மலை கடலுள் மூழ்க திருமால் கூர்ம அவதாரம் எடுத்துத் தன் முதுகால் மலையைக் காத்தார்... தொடர்ந்து கடையவே மஹாலக்ஷ்மி, கௌஸ்துப மணி வெளிப்பட்டன... இவற்றைத் திருமால் ஏற்றார். அமிர்தம் தேவர்க்குத் தரப்பட்டது, ஐராவதத்தை இந்திரன் ஏற்றான், இவற்றோடு தோன்றிய சந்திரனை சிவ பெருமான் ஏற்றார்...
இத்தகைய சந்திரனின் வம்சத்தைச் சேர்ந்தவர்களே பாண்டிய மன்னர்கள் ஆவர்...
கிருஷ்ண பிரான் இதே சந்திர குலமான யதுகுலத்தில் தோன்றினார்... ஆகவே பாண்டியரும் கிருஷ்ணரும் ஒரே வம்சத்தவரே! சந்திர வம்சிகளே! யது குலத்தவரே!
பழந்தமிழர் மன்னர்களைத் திருமாலின் அம்சமாகக் கண்டனர்! மன்னர்களும் தங்களைத் திருமாலின் வழித்தோன்றல்களாகக் கருதினர்! அதிலும் தமிழ்வேந்தரில் முதன்மையானவர்களும், தமிழ் வளர்த்த பெருமைமிக்கவர்களுமான
பாண்டியர் தம் குலமுதல்வன் அண்ட சராசரங்களையும் படைத்தவனான பரம்பொருளாகிய திருமால் தான் என்று ப்ரகடனம் செய்தனர்!
பராந்தக வீரநாராயணன் (பொ.ஆ 859-907)
தளவாய்புரச்_செப்பேடு இதை உறுதிப்படுத்துகின்றது! அது கூறும் செய்தி பாற்கடலில் துயிலும் ஸ்ரீ பூபதியாகிய முதல்வன் திருமால், அவன் நாபிக் கமலத்தில் தோன்றியவன் ப்ரம்மன் அவர் புத்திரன் அத்ரி முனிவர், அவர் மகன் சந்திரன், சந்திரனது புத்திரனும் சூர்ய குல மனுவின் மகளான இளாவை மணந்தவனுமாகிய புதன் வழிவந்த புரூருன், அவன் வழிவந்த நகுஷன் இவர்களது வழித்தோன்றலே பாண்டியர்கள் என்கின்றது!
இந்த செப்பேடு செய்தி முழுக்க முழுக்க ஹரிவம்சத்தின்படி சரியாக உள்ளது! இதன்மூலம் பாண்டியர் சந்திரகுலத்தவர் என்பதும், அத்ரியின் வழிவந்தவர் என்பதால் ஆத்ரேயர் என்று அறியப்பட்டனர் என்பதும், முழுமுதல்வனான திருமாலையே தம் குல முதல்வனாகக் கருதினர் என்பதையும் அறியலாம்!

Comments
Post a Comment