Posts

Showing posts from November, 2018

திருக்குறளில் திருமகள்

Image
திருக்குறளில் அதிகமான முறை குறிப்படப்படும் தெய்வம் மஹாலக்ஷ்மி தாயாரே ஆவார்! குறள் 617: மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். விளக்கம் ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே தாமரையினாள் (திருமகள்) வாழ்கின்றாள்! குறள் 179 அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு. விளக்கம் அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்! குறள் 920 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. விளக்கம் இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்! அதாவது தீய வழியில் செல்வோருக்குத் தாயார் அருள் கிட்டாது! குறள் 167: அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் கா ட்டி விடும். விளக்கம் பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள். வைதீக வள்ளுவர்  

ஐம்படைத்தாலி

Image
காக்கும் இயல்வினனான கண்ணபிரானின் படைக்கருவிகளான சுதர்ஸனம் என்னும் சக்கரம், பாஞ்சஜன்யம் என்னும் சங்கு,  கொமோதிகி என்னும் கதை, நாந்தகம் என்னும் வாள், சார்ங்கம் என்னும் வில் ஆகிய ஐந்தினையும் பஞ்சாயுதங்கள் என்பர். எதிரிகளை அழித்த இப்படைகலண்கள் சிறுகுழந்தைகளை துஷ்ட சக்திகளிடத்திருந்து காக்கும் என்பது நம்பிக்கை. இவற்றை பொன்னால் ஒரு பதக்கம் போல் செய்து குழந்தைகளின் பதின்ம வயது வரை கழுத்தில் அணிவிப்பது பண்டைய தமிழர் மரபு. "தார்பூண்டு தாலி களைந்தன்றும் இலனே! பால்விட்டு அயினியும் இன்று அயின்றனன்" -புறம் "முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்! பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி வருகுவை ஆயின் தருகுவென் பால்" -அகம் "செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப" -மணிமேகலை "எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு வழு இல் கொடையான் வயிச்சிரவணன் தொழுது உவனாய் நின்றான் தாலேலோ                  தூமணி வண்ணனே தாலேலோ" -பெரியாழ்வார் திருமொழி "மங்கல ஐம்படையும் தோல்வளை யும்குழையும் மகரமும