திருக்குறளில் திருமகள்

திருக்குறளில் அதிகமான முறை குறிப்படப்படும் தெய்வம் மஹாலக்ஷ்மி தாயாரே ஆவார்!



குறள் 617:
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
விளக்கம்
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே தாமரையினாள் (திருமகள்) வாழ்கின்றாள்!

குறள் 179
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.
விளக்கம்
அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்!

குறள் 920
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
விளக்கம்
இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்! அதாவது தீய வழியில் செல்வோருக்குத் தாயார் அருள் கிட்டாது!

குறள் 167:
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் கா ட்டி விடும்.

விளக்கம்
பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

வைதீக வள்ளுவர்

 திருவள்ளுவர் அதிகமான முறை குறிப்பிடும் தெய்வம் திருமகளே ஆவார்! அதிலும் வேதத்தில் உள்ள ஸ்ரீஸூக்தம் எவ்வாறு கூறுகிறதோ அதுபோலவே வர்ணிக்கிறார்!

 முதலில் ஸ்ரீ என்பதன் நேரடித் தமிழ் சொல் திரு! ஸ்ரீ என்றாலும் திரு என்றாலும் மஹாலக்ஷ்மி தாயாரே ஆவார்! ஸ்ரீஸூக்தம் தேவியானவள் தாமரை போன்ற கண் உடையவள், தாமரை நிறத்தவள், தாமரை மேல் அமர்ந்தவள் என்று வர்ணிக்கும்! அதையே ஒரே சொல்லால் தாமரையினாள் என்கிறார் திருவள்ளுவர்! 

அத்தோடு வேதம் திருமகளை செம்பொன் நிறத்தவள், தாமரை நிறத்தவள் என்கின்றது! அதை அப்படியே உள்வாங்கி செய்யாள் என்கிறார் திருவள்ளுவர்!

 ஸ்ரீஸூக்தம் மஹாலக்ஷ்மி தாயாரே பசு முதலிய செல்வங்களைத் தருபவள் என்கின்றது! வள்ளுவர் மாடு எனும் சொல்லால் செல்வத்தைக் குறிக்கிறார்! பசுவே செல்வம் என்பது வைதீக நம்பிக்கை அல்லவா?

யமன் எனும் கூற்றுவன் பற்றிய குறிப்புகள் அதிகமிருந்தும் உயர்வு நவிற்சியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!
பட உதவி நன்றி Skaps

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்