முதல்வரின் ஓணம் வாழ்த்து - சில கேள்விகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜயபாரதத்தில் வெளியான எனது கட்டுரை. ஓணத்திற்கு வாழ்த்து கூறிய தமிழக முதல்வருக்குச் சில கேள்விகளை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது. கட்டுரையாளர் - விஷ்ணு சர்மா Vishnu Sharma தலைப்பு - ஹிந்து பண்டிகையும் திராவிட வாழ்த்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வழக்கம் போல ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஹிந்து பண்டிகைக்கு இவர் வாழ்த்து சொல்லி இருப்பது மகிழ்ச்சிதான் என்றாலும் கூடவே நமக்கு இங்கே சில கேள்விகள் எழுகின்றன. 1) வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டவரா மாபலி? வாழ்த்தின் இரண்டாவது பத்தியில் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட மன்னர் என்று மகாபலியைக் குறிப்பிடுகிறார் முதல்வர். இதற்கு என்ன ஆதாரம்? மகாபலி சக்கரவர்த்தியைப் பற்றிச் சொல்லும் புராணங்கள், அவரை பிரகலாதத்தாழ்வார் என்று அழைக்கப்படுகின்ற பரம வைணவரின் பேரன் என்கின்றன. அவர் இந்திரப் பதவியைக் கேட்டு யாகம் செய்ய அந்தப் பதவியை அடுத்த மன்வந்தரத்தில் தருவதாக வாக்களித்து, குள்ள பிராமண உருவில் வந்த பெருமாள் அவருக்கு பாதாள உலகை ஆளுகின்ற வரத்தை தந்தார். வந்திருப்பவர் திருமால் தான் என்பதை அறிந்தும்கூட, அவருடை...