சங்கத்தமிழில் சூரசம்ஹாரம்-22
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-22 சனாதனதர்மத்தில் விழாக்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அதிலும் தீமைகளின் உருவகமான அசுரர்களைத் தெய்வங்கள் வென்ற நாட்களும் கொண்டாடப்படுகின்றன. நரகாசுரனை வென்ற நாள் தீபாவளி என்றால் சூரனை முருகன் வென்ற நாள் சூரசம்ஹார விழாவாகும். சூரனை முருகன் வென்ற வரலாறு அகநானூற்றில் 59வது பாடலில் உள்ளது. ..' சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல் சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து...' அதாவது திருபரங்குன்றத்தை 'சூரனை வென்ற முருகன் சினம் தணிந்து எழுந்தருளிய இடமென்று' சங்கநூல் அகநானூறு கூறுகிறது. ஆக, அசுரர்களைத் தமிழர் எனக் கூறுவதே ஏற்புடையதல்ல. மேலும் சனாதனதர்மமானது பாரத தேசம் முழுவதும் ஒன்றுபோலவே பரவி இருந்தது. முருகனைப்பற்றி வடமொழி புராணங்களான 'ஸ்கந்தபுராணம்', 'வாயுபுராணம்' முதலிய புராணங்கள் கூறும். மஹாபாரத வனபர்வத்தில் ஸ்கந்தன் எனும் முருகனின் வரலாறு கூறப்படுகிறது. முருகனின் வரலாற்றை காளிதாசர் வடமொழியில் 'குமாரசம்பவம்' எனும் நூலாக இயற்றினார். குப்தர் காலத்தில் முருக வழிபாடு வட இந்தியாவில் ப்ரபலம். குமாரக