சங்கத்தமிழில் ஹோலிப் பண்டிகை -21

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-21

 

holi festival in sangam literature

 

காமன்பண்டிகை_எனும்_ஹோலி

 

 

சனாதனதர்மமானது இன்றளவும் பல்வேறு இன்னல்களைக் கடந்து நிற்பதற்குக் காரணம்... சனாதனம் என்பது வாழ்வியல் நெறியாக இருப்பதே ஆகும். வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கொண்டாடி, மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்லும் வழியாக மாற்றியே சனாதனதர்மம் இன்றளவும் நிலைத்துள்ளது.

காமம் என்பதும் காதல் என்பதும் மனித வாழ்வின் முக்கிய அம்சமே ஆகும். தமிழர்கள் இவற்றை கொண்டாடவே செய்தனர். பல்வேறு கோவில்களில் காம சிற்பங்களைக் கடந்தே உள் செல்கிறோம். ஏனெனில் இவற்றைக் கடந்தாலே நாம் வீடுபேறு பெற இயலும்.

பங்குனி மாத பௌர்ணமி காமன் (மன்மதன்) விழாவாக, பங்குனி முயக்கமாக சங்கத்தமிழன் கொண்டாடினான். அன்றைய காதலர் தினம் அது. 

இதனை சோழநாட்டினர் பங்குனி விழாவாகவும் சேரநாட்டினர் உள்ளி விழாவாகவும் கொண்டாடினர் என்பதை

“கழுமலம் தந்த நல்தேர்ச் செம்பியன்

பங்குனி விழவின் உறந்தையொடு

உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே” - (நற்றிணை: 234: 6 - 8)

என நற்றிணை சொல்கிறது. உறையூர்ப் பங்குனி விழா ஊர்கொண்ட பெருவிழாவாக நடந்தது என இறையனார் அகப்பொருள் உரை கூறுகிறது. 

ஆக சங்கத்தமிழன் காதலைக் கொண்டாடினான். நல்ல கணவரைப் பெற சங்கத்தமிழ்ப் பெண்கள் பல்வேறு நோன்புகள் மேற்கொண்டதைக் காணலாம். இதுவே பக்தி இயக்கம் எழுந்தோது திருப்பாவை, திருவெம்பாவையாக பரிணமித்தது. தெய்வீகக் காதலாகவும், 'நாயகி பாவமாகவும்' (இறைவன் ஒருவனையே ஆணாக பாவித்துத் தன்னைப் பெண்ணாக பாவித்து பக்தி செலுத்தும் முறை) செழித்தது. ஆக, தெய்வீகக் காதல் எனும் அன்பு இறைவனை அடையும் ஒரு வழியாகவும் உள்ளது.

 

 

காமத்தையும் காதலையும் கூட கடவுளை அடையும் வழியாக ஆக்கிய சனாதனதர்மிகள் போற்றத்தக்கவர்களே.

இவற்றுக்கெல்லாம் மூலமாக அமைந்த உள்ளிவிழாவே இன்று வடபாரதத்தில் 'ஹோலி' பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. நமது உள்ளி விழாவை நாமும் நம் சகோதரரோடு கொண்டாடுவோம்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்