சங்கத்தமிழில் சூரசம்ஹாரம்-22
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-22
சனாதனதர்மத்தில் விழாக்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அதிலும் தீமைகளின் உருவகமான அசுரர்களைத் தெய்வங்கள் வென்ற நாட்களும் கொண்டாடப்படுகின்றன. நரகாசுரனை வென்ற நாள் தீபாவளி என்றால் சூரனை முருகன் வென்ற நாள் சூரசம்ஹார விழாவாகும்.
சூரனை முருகன் வென்ற வரலாறு அகநானூற்றில் 59வது பாடலில் உள்ளது.
..' சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்
சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து...'
அதாவது திருபரங்குன்றத்தை 'சூரனை வென்ற முருகன் சினம் தணிந்து எழுந்தருளிய இடமென்று' சங்கநூல் அகநானூறு கூறுகிறது.
ஆக, அசுரர்களைத் தமிழர் எனக் கூறுவதே ஏற்புடையதல்ல.
மேலும் சனாதனதர்மமானது பாரத தேசம் முழுவதும் ஒன்றுபோலவே பரவி இருந்தது.
முருகனைப்பற்றி வடமொழி புராணங்களான 'ஸ்கந்தபுராணம்', 'வாயுபுராணம்' முதலிய புராணங்கள் கூறும். மஹாபாரத வனபர்வத்தில் ஸ்கந்தன் எனும் முருகனின் வரலாறு கூறப்படுகிறது. முருகனின் வரலாற்றை காளிதாசர் வடமொழியில் 'குமாரசம்பவம்' எனும் நூலாக இயற்றினார். குப்தர் காலத்தில் முருக வழிபாடு வட இந்தியாவில் ப்ரபலம். குமாரகுப்தா , ஸ்கந்தகுப்தா எனும் பெயருடைய மன்னர்கள் இருந்தனர். குமாரகுப்தர் வெளியிட்ட நாணயங்களில் முருகன் உள்ளார்.
ப்ரும்ஹவைவர்த புராணமானது ஸ்கந்தனை விஷ்ணுவின் அவதாரம் என்கின்றது. மேலும் பகவத்கீதையில் கண்ணன் 'சேனாதிபதிகளில் நான் ஸ்கந்தன்' என்கிறார்.
ஆக, சனாதனதர்மத்தில் எண்ணற்ற கடவுளர் இருப்பினும், அவர்கள் அனைவரும் ஒரே பரம்பொருளின் அம்சமே என்ற கருத்து, கொள்கை இங்கே தெளிவாக உணர்த்தப்படுகிறது.

Comments
Post a Comment