சங்கத்தமிழில் மஹாபாரதம் - 46

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 46




இதிஹாசங்கள் சனாதனதர்மத்தின் முக்கியமான அங்கங்களாகும், அதிலும் உலகின் மிகப் பெரிய காவியமான மஹாபாரதம், எண்ணற்ற அறங்களைத் தன்னுள் கொண்டதாகும். சங்க இலக்கியங்களில் மகாபாரதக் குறிப்புகள் பல உள்ளன.

பெரும்பாணாற்றுப்படை (415 - 417)

'ஈர்ஐம் பதின்மரும் பொருது களத்து அவிய
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல'

மன்னன் இளந்திரையனைப் புகழ வந்த புலவர்
              'ஈர் ஐம்பது பேராகிய நூறு கௌரவர்களுடன் களத்திலே சண்டையிட்டு வென்ற பெரிய தேர்களை உடைய பாண்டவர்களைப் போல போர் என்றாலே வெற்றியை மட்டுமே கண்டவன்' என்று புகழ்கிறார்.

அதாவது இதிலிருந்து மிகத் தெளிவாக மகாபாரதக் கதை சங்கக்காலத்திலேயே தமிழரிடம் வழங்கி வரப் பெற்றது என்பதையும், மன்னர்களைப் பாண்டவரோடு ஒப்பிடுவதால், பாண்டவர்கள் பழந்தமிழரால் வெற்றி நாயகர்களாகக் கொண்டாடப் பட்டனர் என்பதையும் அறியலாம்.

மகாபாரதமானது பாரத மக்களின் ரத்தத்தில் ஊறிப் போனதாகும். அதனால் தான் சங்கக்காலம் தொடங்கி, இன்றும் தமிழரிடையே மிகப் பெரிய செல்வாக்குடன் வழங்கப் பெறுகிறது. 

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்