Posts

Showing posts from August, 2019

திணை தெய்வங்கள் பெருந்தெய்வங்களே!

Image
தொல்காப்பியத்தில் நான்கு திணைகளுக்கும் ஒவ்வொரு தெய்வத்தைக் கூறப்படுகின்றது! இதனால் அத்தெய்வங்கள் அந்நிலத்திற்கு மட்டுமே உரியவர்கள், மற்ற நிலங்களுக்குத் தொடர்பற்றவர்கள் என்று பொருள் கொள்ள இயலாது! ஏனெனில் சங்க இலக்கியங்கள் எல்லா நிலங்களிலும் திருமாலுக்கும், முருகனுக்கும் கோவில் இருந்ததை உறுதி செய்கின்றன! வருணன் கடல்தெய்வம் அதனால் கடல்சார்ந்த இடமான நெய்தல் நிலத் தெய்வம் எனப்பட்டார்! இந்திரன் மழை, விளைச்சலுக்கான தெய்வம் ஆதலால் மருத நிலத்துக்குரியவன் ஆனான்! சேயோன் இமயமலையில் பிறந்தவன், குறமகளான வள்ளியின் மணாளன் அதனால் குறிஞ்சி நிலத்து தெய்வமானான்! கண்ணபிரான் ஆயர்பாடியிலேயே வளர்ந்தவன்! 'ஆயர்தம் கொழுந்தே'  என்று ஆழ்வார்களால் போற்றப்படுபவன், என்பதால் ஆயர் நிலமான முல்லைக்கு உரியவன் ஆனான்! இதனால் நான்கு திணை தெய்வங்கள் எல்லா திணைக்கும் உரியவர்களே என்பதையும், ஆனால் அக்குறிப்பிட்ட  திணைகளுக்குச் சிறப்பாக உரியவர்கள் என்று அறியலாம்!

சங்க இலக்கிய திருமாலும் வேத விஷ்ணுவும் ஒருவரா?

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதநதர்மம் - 55 தமிழின் மிகப் பழமையான சங்க நூற்களில் கூறப்படும் தெய்வங்கள் வேத தெய்வங்களே ஆவர்! இதில் எவ்வித ஐயமும் இல்லை! இன்று சிலர் வேதத்தில் விஷ்ணு இல்லை, பிற்காலத்தில் வேதத்தில் ஒட்டவைக்கப்பட்ட விஷ்ணுவும் தமிழ் இலக்கியங்களில் வரும் திருமாலும் வெவ்வேறு என்று கூறுவதற்குத் தமிழ் இலக்கியங்களில் ஆதாரம் இல்லை என்பதாகும்! வேதங்களில் உள்ள புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம் ஆகியவை விஷ்ணுவைப் போற்றுவதாகும்! சங்க இலக்கியங்களில் அதிகமாகப் போற்றப்படுபவர் திருமாலே ஆவார்! அதிலும் சங்க நூற்களிலும் இதர பக்தி இலக்கியங்கள் அல்லாத நூற்களை எடுத்துக் கொண்டாலும் அதிகமான முறை கூறப்படும் புராண நிகழ்வு வாமன அவதாரத்தில் திருமால் த்ரிவிக்ரமனாகத் தோன்றி உலகளந்ததே ஆகும்! திருவள்ளுவரும் அடியளந்தான் என்று இவரைக் குறிப்பிடுகிறார்! இத்தோடு திருமால் பற்றிய அதிகமான குறிப்புகளைக் கொண்டதான பரிபாடல் எனும் சங்க நூல் 'வேதத்து மறைநீ பூதத்து முதலுநீ' என்று வேதத்தின் மறைபொருள் திருமாலே என்று பறைசாற்றுகின்றது! அத்தோடு 'வாய்மொழி யோடை மலர்ந்த தாமரைப் பூவினுட்பிறந்தோனுந் த

சங்கத்தமிழில் தெய்வானை

Image
சங்கத்தமிழ் காட்டும் சநாதனதர்மம் -57 ஸம்ஸ்க்ருதப் புராணங்களில் குறிப்பிடப்படும் ஸ்கந்தன்/கார்த்திகேயன் வேறு தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் முருகன் வேறு என்று சிலர் கூறுகின்றனர்... அதற்குச் சான்றாய் சங்கத்தமிழ் இலக்கியத்தில் முருகன் குறிஞ்சித் தெய்வமாதலால் வள்ளி எனும் குறமகள் மட்டுமே முருகன் மனைவி, தெய்வானை எனும் இந்திரன் மகளை முருகன் மனைவி என்று பார்ப்பனர்கள் பிற்காலத்தில் இட்டுக்கட்டு எழுதிவிட்டனர் என்றெல்லாம் உளறி வருகின்றனர்...இதற்கு எவ்வித சான்றும் இல்லை என்பதாகும்! தொல்காப்பியத்தின் படி இந்திரன் எனும் வேந்தன் மருத நிலத் தெய்வம் ஆவார்! இவரது மகளே தெய்வானை ஆவார்! "ஐயிருநூற்று மெய்ந்நயனத் தவன்மகள் மலருண்கண்" - பரிபாடல் 9 வரி 8 ஐயிருநாறு - ஐந்து இருநூறு அதாவது 5×200=1000...நயனம் - கண்கள்! இந்திரன் ஆயிரம் கண்களை உடையவராவார்! அவரது மகள் தெய்வானை! என்று பரிபாடல் இதை உறுதிசெய்கின்றது! ஆகவே புராணங்களில் உள்ள கருத்தே சங்க இலக்கியங்கள் ப்ரதிபலிக்கின்றனவே அன்றி இரண்டும் முரண்பட்டவை அல்ல என்று தெளிவாகின்றது! திடீர் தமிழர்கள் பரப்பும் அத்தனைப் பொய்களையும் உடைக்கும