திணை தெய்வங்கள் பெருந்தெய்வங்களே!



தொல்காப்பியத்தில் நான்கு திணைகளுக்கும் ஒவ்வொரு தெய்வத்தைக் கூறப்படுகின்றது! இதனால் அத்தெய்வங்கள் அந்நிலத்திற்கு மட்டுமே உரியவர்கள், மற்ற நிலங்களுக்குத் தொடர்பற்றவர்கள் என்று பொருள் கொள்ள இயலாது! ஏனெனில் சங்க இலக்கியங்கள் எல்லா நிலங்களிலும் திருமாலுக்கும், முருகனுக்கும் கோவில் இருந்ததை உறுதி செய்கின்றன!





வருணன் கடல்தெய்வம் அதனால் கடல்சார்ந்த இடமான நெய்தல் நிலத் தெய்வம் எனப்பட்டார்!

இந்திரன் மழை, விளைச்சலுக்கான தெய்வம் ஆதலால் மருத நிலத்துக்குரியவன் ஆனான்!

சேயோன் இமயமலையில் பிறந்தவன், குறமகளான வள்ளியின் மணாளன் அதனால் குறிஞ்சி நிலத்து தெய்வமானான்!

கண்ணபிரான் ஆயர்பாடியிலேயே வளர்ந்தவன்! 'ஆயர்தம் கொழுந்தே'  என்று ஆழ்வார்களால் போற்றப்படுபவன், என்பதால் ஆயர் நிலமான முல்லைக்கு உரியவன் ஆனான்!

இதனால் நான்கு திணை தெய்வங்கள் எல்லா திணைக்கும் உரியவர்களே என்பதையும், ஆனால் அக்குறிப்பிட்ட  திணைகளுக்குச் சிறப்பாக உரியவர்கள் என்று அறியலாம்!

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்