கற்போம் கம்பரை
கம்பர் சைவரா வைணவரா என்று சர்ச்சையால் விளைந்த நன்மையை என்னவென்பது? இதுவரை ஆழமாகக் கம்பரைக் கல்லாத அடியேன் ராமாவதாரம் படித்து உருகுகிறேன்! முத்தையா என்ற நாத்திகன் கம்பரைக் கிண்டல் செய்ய எண்ணி ராமாயணம் படிக்க கம்பனால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணதாசன் ஆனான் என்பது சுயசரிதை! அதைப் போல் கற்பவரைக் கசிந்துருகச் செய்யும் கவி ஆற்றல் கம்பனுடையது! தமிழ்த்தாயே இறைவனிடம் தவமிருந்து பெற்ற பிள்ளை கம்பன்! அதனால் தான் "தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே” என நாமக்கல் கவிஞர் கூறியுள்ளார். மனத்தில் ராமபக்தியை விதைக்கும் இந்நூலை கவித்திறனுக்காக மட்டுமே போற்றுவது ஏற்கத்தக்கதல்ல! கம்பராமாயணத்தின் உடல் செந்தமிழ் என்றால் அதன் உயிர் 'ராமபக்தி' ஆகவே 'கற்போம் கம்பனை' என்ற தலைப்பில் கம்பன் வழியாக தமிழைச் சுவைப்பதோடு முக்கியமாக ராமரசத்தைச் சுவைப்போம்! தமிழ் மிகப் பெரிய இலக்கியமாக விளங்குவது கம்பர் பெருமான் இயற்றிய ராமாயணமே ஆகும்! ஆனால் அவர் இட்ட பெயரோ 'ராமாவதாரம்' பெயரிலிருந்தே தொடங்குவோம்! ராமாவதாரம் நிகழக் காரணம் என்ன? இதோ கம்பரே சொல்