மாயோன் கிருஷ்ணரா? விஷ்ணுவா? 

மாயோன் கிருஷ்ணரா? விஷ்ணுவா?



 மாயோன்! இந்த ஒற்றைச் சொல் அத்தனை இந்து விரோத பிரிவினைவாத, திராவிட இதர மிஷனரி கும்பல்களையும் அலற வைக்கின்றது! காரணம் அது தமிழ் இலக்கிய உலகில் நீண்ட தொடர்ச்சியை உடையது மட்டுமன்றி எளிய மக்களின் பயன்பாட்டிலும் கிருஷ்ணன்/விஷ்ணுவைக் குறிக்கும் சொல்லாகவே உள்ளது! இலக்கியங்களில் இச்சொல் விஷ்ணுவைக் குறிக்கிறதா அல்லது கிருஷ்ணரைக் குறிக்கிறதா என்ற குழப்பம் பல இடங்களில் வருகின்றது!

 ஒரு வகையில் இக்குழப்பம் நல்லது! மாயோன் என்பவர் இருவருமே அல்ல என்று கூற எந்த இலக்கியத்தில் ஆதாரமில்லை! அதனால் புதுக்குழப்பம் செய்வோர் உண்டு...ஆனால் அதற்கும் வழியில்லை! அதாவது பெருமாள் தான் தமிழர் சாமி வடமதுராவில் பிறந்து குஜராத் துவாரகையை ஆண்ட கிருஷ்ணர் ஆர்ய தெய்வம் என்று கூறினால் கலித்தொகை, புறநானூறு ஆகியவற்றில் குறிப்பிடப்படும் மாயோன் கிருஷ்ணனன்றி வேறு யார் என்ற கேள்வி வரும்! ஒரு வேளை மாயோன் முல்லை தெய்வம் கிருஷ்ணன் தான்... விஷ்ணு என்பவரை ஆர்யர் தூக்கிக்கொண்டு வந்தனர் என்றால் பரிபாடல், கம்பராமாயணம், மணிமேகலை கூறும் மாயோன் விஷ்ணு அன்றி வேறு யாரென்று கூறவேண்டும்! 

ஆக எந்தப் பக்கம் போனாலும் கேட் போட்டு விடுகிறார் மாயோன்! எளிமையாகப் பார்த்தால் பலராமனோடு சேர்த்துக் குறிப்பிடும் இடங்களில் மாயோன் என்பது கிருஷ்ணரையும், மஹாலக்ஷ்மியோடு குறிப்பிடப்படும் இடங்களில் அதுவே விஷ்ணுவையும் குறிப்பிடுகின்றது! விஷ்ணுவின் பரிபூரண அவதாரம் என்பதால் கிருஷ்ணரே பரம்பொருள் என்று கூறும் கௌடிய வைஷ்ணவத்திற்கும், விஷ்ணுவே பரம்பொருள் என்று கூறும் ஸ்ரீவைஷ்ணவத்துக்குமான அழகிய முரண் சங்க இலக்கியத்திலும் ப்ரதிபலிக்கின்றது என்றே கூறலாம்! அகநானூற்றிலே மால் என்றே சொல்லே கண்ணனைக் குறித்து வந்துள்ளது இதற்கு ஆதாரம்!

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்