திருவேங்கடத்தின் சிறப்பு 

திருவேங்கடத்தின் சிறப்பு

உலகிலேயே மிக அதிகமான பக்தர்கள் தரிசிக்க வரும் கோவிலாகவும், மிகப் பணக்காரக் கோவிலாகவும் விளங்குவது திருப்பதி வெங்கடேஷ்வரர் கோவிலாகும்! இக்கோவிலானது இவ்வளவு பிரபலமாக இருப்பதற்குக் காரணம் இதன் பழமையே ஆகும்! தமிழ் மொழிக்கு இலக்கணம் தோன்றிய காலத்திலிருந்து இக்கோவில் உள்ளது!



ஆம்... தமிழில் நமக்குக் கிடைத்த முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பனம்பாரனார் என்னும் பழந்தமிழ்ப் புலவர் பாடியுள்ள சிறப்புப் பாயிரத்தில் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்” என்று வருமிடத்தில் உரையாசிரியர் நச்சினார்க்கினியரும், "நிலங்கடந்த நெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடுபெற்ற மலை” என்று விளக்கியுள்ளார். இங்கு திருமால் வாமன அவதாரத்தில் மஹாபலியிடம் சென்று உலகனைத்தையும் ஈரடியால் அளந்த புராணத்தை “நிலங்கடந்த நெடுமுடி அண்ணல்” எனும் சொற்களால் நினைவூட்டுகிறார்....சங்க இலக்கியங்களிலும் வேங்கடம் குறிப்பிடப்படுகின்றது!


திருமலையை 'நெடியோன் குன்றம்' என்று கூறும் சிலப்பதிகாரம் அங்கு கோவில் கொண்டுள்ள திருமாலை அழகாக வர்ணித்து அக்கோவிலுக்கு மிகப் பழங்காலத்திலிருந்தே பக்தர்கள் யாத்திரை செல்வதையும் பதிவு செய்கின்றது! நெடியோன் என்றாலே ஓங்கி உலகளந்த பெருமாளையே குறிக்கும்! இதன் மூலம் திருமலையில் இருப்பவர் திருமாலே என்பதையும் இக்கோவில் திடீரென்று பிரபலமானது அல்ல தமிழ் தோன்றிய காலத்திலிருந்து திருமால் கோவிலாக சிறப்புற்றுள்ளது என்பதையும் உணரலாம்!


கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய தொடிமாண் உலக்கைத் தூண்டுரல் பாணி நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும் குன்றுபின் ஒழியப் போகி........................ - அகநானூறு 

 மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம் - அகநானூறு

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்