சங்கத்தமிழில் திருமகள் - 51

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்

தமிழ் மரபில் திருமகளுக்குச் சிறப்பான இடம் உண்டு! ஸம்ஸ்க்ருதத்தில் 'ஸ்ரீ' என்பது லக்ஷ்மியைக் குறிப்பது போலவே தமிழில் 'திரு' என்பது நீங்காத செல்வம் உடையவளான திருமகளையே குறிக்கும்! தமிழரது பல்வேறு ஊர்ப்பெயர்கள் 'திரு' என்றே தொடங்கும்! இது ஒன்றே திருமகளுக்குத் தமிழர் தந்த பெருமதிப்பிற்கான சான்றுதானே?!

சங்க நூல்கள் மஹாலக்ஷ்மியைப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றன! திருமாலை வர்ணிக்கும் பல்வேறு இடங்களில் அவன் வல மார்பினில் வடிவாய் விளங்கும் திருமகளை சேர்த்தே போற்றுகின்றனர் சங்கத்தமிழ்ப் புலவர்கள்! அதற்கான உதாரணம் கீழே!

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல
- முல்லைப்பாட்டு (2,3)

வண்டூது பொலிதார்த் திருஞெமர் அகலத்து - பதிற்றுப்பத்து- 31

இருகிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் - பெரும்பாணாற்றுப்படை - 28

திருவின் கணவ! பெரு விறல் மள்ள!
- பரிபாடல் 90

சிறந்த கணவன் மனைவிக்கான உதாரணமாக பழந்தமிழர் கொண்டது திருமாலையும் திருமகளையும் தான் போலும்... அதனால் இலக்கியத்திலும் கூட திருமகளை பெரும்பாலும்  தனித்து குறிப்பிடாது திருமாலோடு சேர்த்தே குறிப்பிட்டனர் எனலாம்!


செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து
அகநானூறு 316 

செய்யோளான திருமகள் நீங்கினால் வறுமை ஏற்படும் என்று பழந்தமிழர் நம்பினர்! 



புறநானூறு - 358. விடாஅள் திருவே!

பாடியவர்: வான்மீகியார்.
பாடலின் பின்னணி: இல்லறத்தைவிட துறவறமே சிறந்தது என்ற கருத்தை இப்பாடலில் வான்மீகியார் கூறுகிறார்.
திணை: காஞ்சி.
துறை: பெருங் காஞ்சி, மனையறம் துறவறமும் ஆம்.

பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி அற்றே;
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது; ஆகலின்
கைவிட் டனரே காதலர்; அதனால்     ,                           
விட்டோரை விடாஅள் திருவே;
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.

அருஞ்சொற்பொருள்: 1. பருதி = பரிதி = கதிரவன்; பயம் = பயன். 2. எழுவர் – பலர் என்ற பொருளில் வந்துள்ளது; எய்துதல் = அடைதல்; அற்று =அத்தன்மைத்து. 3. வையம் = உலகம் (இல்லறத்தைக் குறிக்கிறது); தவம்  - தவம் செய்யும் துறவிகள் மேற்கொள்ளும் துறவறத்தைக் குறிக்கிறது; தூக்கில் = ஆராய்ந்தால். 4. ஐயவி = சிறு வெண்கடுகு; ஆற்றாது = ஒப்பாகாது. 5. காதலர் = இல்லறத்தில் பற்றுடையவர்கள். 6. திரு = திருமகள்.

உரை: கதிரவனால் சூழப்பட்ட , இப்பயன் மிக்க பெரிய உலகத்தை  ஒரே நாளில் பலர் ஆட்சி செய்திருக்கிறார்கள். இல்லறத்தையும் துறவறத்தையும் ஆராய்ந்து பார்த்தால், துறவறத்துக்கு இல்லறம் கடுகளவும் ஒப்பாகாது.  அதனால், தவம் செய்வதை விரும்பியவர்கள் பற்றுக்களை கைவிட்டனர்.  பற்றுக்களை விட்டவர்களைத் திருமகள் கைவிடமாட்டாள். திருமகளால் கைவிடப்பட்டவர்கள் பற்றுக்களை விடமாட்டார்கள்!

ஆகவே உலகப் பற்றை விடுத்து திருமாலை நோக்கி வீடுபேறு வேண்டுவோரை திருமகள் கைவிட மாட்டாள்! 


சங்க நூல்கள் மஹாலக்ஷ்மித் தாயாரைப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றன! திருமாலை வர்ணிக்கும் பல்வேறு இடங்களில் அவன் வல மார்பினில் வடிவாய் விளங்கும் திருமகளை சேர்த்தே போற்றுகின்றனர் சங்கத்தமிழ்ப் புலவர்கள்! 

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல
- முல்லைப்பாட்டு (2,3)

இப்பாடல் வாமன அவதாரத்தில் மகாபலி தாரை வார்த்த நீரை வாங்கிக் கொண்டே த்ரிவிக்ரமனாக வளர்ந்த திருமாலை கடல்நீரை உண்டு மேலெழுந்த மேகங்களுக்கு உவமையாகப் புலவர் கூறியுள்ளார்! 

வண்டூது பொலிதார்த் திருஞெமர் அகலத்து - பதிற்றுப்பத்து- 31

இப்பாடல் சங்ககாலத்தில் திருமால் கோவில் சிறப்புற்றிருந்ததையும் அங்கே மக்கள் ஏராளமானோர் விரதமிருந்து தீர்த்தமாடி பெருமாளை வணங்கினர் என்று உண்மையையும் கூறும்!

இருநிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் - பெரும்பாணாற்றுப்படை - 28

இப்பாடலில் தொண்டைமான் இளந்திரையன் என்னும் அரசனைத் திருமால் வழிவந்தவன் என்று புலவர் கூறுகிறார்!

திருவின் கணவ! பெரு விறல் மள்ள!
- பரிபாடல் 

இப்பாடல் நேரடியாகவே திருமாலைத் துதிக்கும் இடத்தில் ஸ்ரீபதி  என்கின்றது!

இதுபோக பழங்கால நகரங்களைப் குறிப்பிடும் போது சங்கப் புலவர்கள் திரு எனும் லக்ஷ்மி நீங்கா நகர் என்றும், அதன் வாயில்களில் லக்ஷ்மி நிறைந்திருந்தாள் (தோரணங்களில் கஜலக்ஷ்மி உருவம் இருந்திருக்கும்!) என்றும் கூறுவர்! 

பதிவு - விஷ்ணு சர்மா

#திருமகள் #வரலக்ஷ்மி_விரதம்

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்