சங்கத்தமிழ்_காட்டும்_ஆலய வழிபாடு- 52

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்- 52

சங்க இலக்கியங்களில் உள்ள சில பாடல்களை மட்டும் படித்துவிட்டுச் சங்கத்தமிழர் நடுகல் வழிபாடு மட்டுமே செய்தனர்! வைதீக மதத்தைப் பின்பற்றவில்லை என்று பலர் பேசத்துவங்கிவிட்டனர்! அதற்குப் பதிலடி சங்க இலக்கியத்திலேயே உண்டு! பெரும்பாணாற்றுப்படை எனும் நூலை உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் தொண்டைமான் இளந்திரையன் மீது பாடியுள்ளார்!

இதில் அம்மன்னனைத் திருமால் வழிவந்தவன் என்று காட்டுகிறார்! அவன் ஆண்ட காஞ்சி மாநகரே திருமால் நாபியிலிருந்து தோன்றிய தாமரையின் வடிவம் என்கிறார்! அதே போல திருவெஃகா எனும் திவ்யதேசத்தின் பெருமையைப் பாடுகிறார்!

'நீடு குலைக்
காந்தள் அம்சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்'
(அடி.371-373)
அதாவது காந்தள் மலர் நிறைந்த மலைச்சாரலிலே பெரிய ஆண்யானைப் படுத்திருப்பதைப் போல் திருவெஃகா நகரின் மையத்தில் கோவில் கொண்ட திருமால் ஆயிரம் தலைவிரித்த பாம்பணைமீது பள்ளி கொண்டுள்ளாராம்!

அந்நகர மக்கள் திருமாலை பக்திப் பரவசத்தோடு வணங்கிவருவராம்! அங்கு நீயும் சென்று உன் யாழை மீட்டி திருமால் மீது பக்திப் பாடல்கள் பாடி வணங்கிவா என்று புலவர் மற்றொரு புலவரை வழிநடத்துகிறார்! திருவெஃகா எனும் இத்தலத்தில் தான் ப்ரம்மதேவரது யாகத்தீயை ஸ்ரீமன் நாராயணன் காத்தார்! இஃது இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது!


Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்