பெருந்தமிழன் நல்லேன் பெரிது

பெருந்தமிழன்_நல்லேன்_பெரிது!




யார் உண்மையான தமிழர்? யார் பேசுவது உண்மையான தமிழ்தேசியம்? யாருடையது தமிழர் சமயம்? பாரத தேசத்தையும், சநாதநதர்மத்தையும் எதிர்க்கும் 'திடீர் தமிழ்தேசியர்' இந்த ஈராயிரம் வருட தமிழ்தேசியர்களின் கேள்விக்குப் பதில் தருவீரா?
முந்து நூல் தொல்காப்பியம் காட்டும் முதல் தெய்வத்தை பெயர் திரிக்காது மாயோன், மாயவன், மாலவன் என்றே பழமை மாறாது பாசுரம் பாடிப் பரவுவோர் யார்?
சங்கத் தமிழர் தம் பெருந்தெய்வம் மாலவனை பைந்தமிழால் பாடுவதால் 'என்னினும் பெருந்தமிழன் உளரோ' என்று கேட்கும் பூதத்தாழ்வார் வழி நிற்போர் யார்?
வள்ளுவத்தை உலகப்பொதுமறை என்று கூறும் முன்பே பாண்டிய நாட்டுப் பைந்தமிழ்ப் பெண் ஆண்டாள் நாச்சியார் படித்த பாமாலை அறியாதாரை 'வையம் சுமப்பது வம்பு' என்றே பாடி தெய்வத் தமிழ்நூல் திருப்பாவையை உலகப் பொதுமறையாகக் கண்டவர் யார்? 
தெலுங்கு மன்னரான கிருஷ்ணதேவராயரையும் தமிழ்ப் பெண் ஆண்டாள் மீது பக்தி கொண்டு 'ஆமுக்தமால்யதா' என்று சரிதத்தை தெலுங்கில் எழுத வைத்துத் தமிழ் பெண்மைக்குப் பெருமை சேர்த்தார் யார்?
ஆந்திரம், கர்நாடகம் ஏன் வடமாநிலங்களுக்கும் சென்று தீந்தமிழால் திவ்ய தேசத்து பெருமாளைப் பாடி அப்பாசுரங்களை இன்றும் அங்கே சேவித்து வடவரையும் வணங்க வைத்தவர்கள் யார்?
எம்பெருமான் எழுந்தருள ஸம்ஸ்க்ருத வேதங்கள் பின்தொடர தமிழ்ப்பாசுரங்கள் பாடி முன் செல்லும் வழக்கமுடையோர் யார்? தமிழை வழிபாடு மொழியாக முன்னிலையில் வைத்தோர் யார்?
இவ்வளவு ஏன் இன்றும் நீங்கள் ரசம், பாயசம் என்று கூற... அதையும் அமுதத் தமிழால் சாற்றமுதுதிருக்கண்ணலமது என்றே கூறித் தமிழைத் தம் வாழ்வியல் மொழியாகவே கொண்டோர் யார்?
எம் தேசத்தையும், தர்மத்தையும் எதிர்க்கவே தமிழ் வேஷம் போடும் 'திடீர் தமிழரே' மேற்குறித்த விஷயங்கள் ஏதேனும் ஒன்றை நீங்கள் செய்தீரா? உண்மையான தமிழ் தேசியம் வேண்டின் எங்களோடு வாருங்கள் தெய்வத்தமிழை, ஞானத்தமிழை கற்று, கற்றதனால் ஆய பயனாய் வாலறிவான் ஆகிய 'மாலவன்' நற்றாளைத் தொழுதிடுவோம்! வீடு பெறுவோம்!

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்