வேத துர்கையும் தமிழர் கொற்றவையும் ஒன்றா?
வேத துர்கையும் தமிழர் கொற்றவையும் ஒன்றா? தமிழரது சமயம் தனித்தது! அது வேத வைதீக இந்து சமயம் அல்ல என்ற பொய்யை நிறுவ இன்று சிலர் படாத பாடு படுகின்றனர்! அதில் ஒன்று தான் இந்த மாயோன் வேறு, கிருஷ்ணன் வேறு, அதேபோல் முருகன் வேறு சுப்ரமண்யன் வேறு என்று வேத தெய்வங்களும் தமிழர் தெய்வங்களும் வெவ்வேறு என்று பொய்யான, ஆதாரமற்ற பரப்புரை...அந்த வரிசையில் இப்போது துர்கை வேறு கொற்றவை வேறு என்று சிலர் ஆரம்பித்துள்ளனர்! இது உண்மையா என்று ஆராய்வோம்! கொற்றவை பற்றிய நீண்ட நெடிய விளக்கமான குறிப்பு சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் வருகின்றது! ஆகவே அதனை ஆய்வுக்கு உட்படுத்துவோம்! இதில் மறவர்கள் கொற்றவையை வணங்கிய செய்தி வருகின்றது...அதில் வருகின்ற வர்ணனை அப்படியே மஹிஷாசுரமர்தினியையே குறிக்கின்றது.. வர்ணனையைப் பார்ப்போம்! கொற்றவையானவள் பிறையைச் சூடிய நெற்றியும், நெற்றிக் கண்ணும், முத்தான பற்களும், ஆலகால விஷத்தால் கறுத்த கண்டமும், சூலமும் உடையவள்! அவளே வாசுகியை நாணாக்கி மேருமலையை வில்லாக வளைத்தவள்! யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியவள்! தலை எருமையாகவும் உடல் அசுரனாகவும் இருவேறு வடிவங்கள் பொருந்திய மஹி