அவதாரம் என்பதை விளக்கும் சங்கப்பாடல்!
அவதாரம் என்பதை விளக்கும் சங்கப்பாடல்!
பிறப்பவன் இறைவனா? நம்மிடம் பொதுவாகச் சிலர் கேட்கும் கேள்வி மனிதர்கள் தானே கர்மவினையைத் தீர்க்கப் பிறக்கிறோம்... பகவான் ஏன் ராமர் கிருஷ்ணர் என்று பிறக்கிறார்? மனிதனைப் போல் பிறப்பவன் எப்படிக் கடவுளாவான்? அதாவது அவதாரம் என்ற வைதீக சநாதந தர்மக் கோட்பாடு புரியாதவரே இவ்வாறு கேட்கின்றனர்!
அவதாரம் என்றால் என்ன? அவதாரம் என்ற சங்கதச் சொல்லிற்குக் கீழ் இறங்கி வருதல் என்று பொருள்! நமது சநாதந தர்மத்தில் பரம்பொருளான திருமால் எப்போதெல்லாம் அதர்மம் தலைவிரித்து ஆடுகிறதோ அப்போதெல்லாம் அவதாரம் செய்து பக்தர்களைக் காப்பேன் என்று கீதையில் கூறுகிறார்! அதன்படியே அவதாரமும் செய்கிறார்! இதை விளக்க வேதமந்திரம் தேவையில்லை...சங்கப்பாடலே போதும்!
முதல் முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில் பிறவாப் பிறப்பு இல்லை, பிறப்பித்தோர் இலையே (பரிபாடல் 3, வரிகள் :71-72)
அதாவது படைத்தல்,காத்தல்,அழித்தல் எனும் மூன்று தொழிலும் புரிகின்ற பரம்பொருளாகிய திருமால் மீன், ஆமை, வராஹம் என்று எடுக்காத அவதாரமே (பிறப்பே) இல்லை ஆனால் அவனைப் பிறப்பித்தவர் இல்லை! அதாவது கர்மாவினால் கட்டுண்டு அதைத் தீர்க்கும் நிர்பந்தத்தில் அவன் பிறப்பதில்லை, பக்தர்களுக்கு அருள்வதற்காகவே அவர்களது அன்பிற்கு மட்டுமே கட்டுப்பட்டுப் பிறக்கிறான்! அதுபோல அவனுக்கு மேலாக யாரும் இருந்து 'பிற' என்று ஆணையிட்டு அவன் பிறப்பதில்லை! அவனுக்கு மேலானவர் இல்லை! அதனால் தான் திருமாலை மோக்ஷம் தருகின்ற முழு முதற் பரம்பொருளாகத் தமிழர் வணங்கினர்!

Comments
Post a Comment