Posts

Showing posts from April, 2023

ஆரிய பார்ப்பனியத்தை எதிர்த்த சங்ககால அரசர்கள்!

Image
சங்க கால தமிழரசர்களின் ஆரிய பார்ப்பன எதிர்ப்பு!  தங்கள் வம்சாவளியைச் சார்ந்த பிற்கால அரசர்களைப் போல் சங்ககால சேர, சோழ, பாண்டியர்கள் பிராமணரை மதிக்கவில்லை... அநியாயமாகக் கொடுமைப்படுத்தியுள்ளார்கள்... என்னென்ன கொடுமை என்று வரிசையாகப் பார்ப்போம். 1) பார்ப்பனர் நோக எதையும் செய்யாதவன் சோழன். புறநானூறு 43 வரி 3 -15 பாடியவர் - தாமப்பல் கண்ணனார் பாடப்பட்டவன் - சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் பாடல்  கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ  தன் அகம் புக்க குறு நடை புறவின் தபுதி அஞ்சி சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக நேரார் கடந்த முரண் மிகு திருவின் தேர் வண் கிள்ளி தம்பி வார் கோல்  கொடு மர மறவர் பெரும கடு மான் கைவண் தோன்றல் ஐயம் உடையேன் ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது நீர்த்தோ நினக்கு என வெறுப்ப கூறி. பொருள் - பருந்திடமிருந்து புறாவைக் காக்கத் தன் சதையைத் தந்த சிபிச் சக்கரவர்த்தியின் மரபினனே சோழனாகிய நீ. உன் முன்னோர் பார்ப்பனர் நோக எதையும் செய்ய மாட்டார்கள். 2) நால்வேதமும் வல்ல பிராமணரை பாண்டியன் பணிந்து தலை வணங்கினான். இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த 

தமிழரின் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டா?

Image
சோபகிருது வருஷ புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்று உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களால் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயர் சரியானதா? சாமானியமாக தமிழ் புத்தாண்டு என்று கூறினாலும் கூட உண்மையில் இப்புத்தாண்டை சூரியப் புத்தாண்டு அல்லது சௌரமான புத்தாண்டு என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் மொழிக்கு ஒரு புத்தாண்டு என்பது என்றுமே இருந்ததில்லை.  உதாரணமாக நாம் ஆங்கில புத்தாண்டு என்று கூறினாலும் கூட அது ஆங்கிலேயர்களால் மட்டும் இன்றி பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை பேசுகின்ற கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவம் பரவிய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளின் ஆட்சிக்கு உட்பட்ட காலனிய பகுதிகளிலும் இப்புத்தாண்டு வரவேற்பைப் பெற்று இன்று உலகின் புத்தாண்டு என்ற நிலையை எழுதி விட்டது. என்றாலும் இதனுடைய தோற்றுவாய் என்று பார்த்தோமேயானால், கிரகேரியன் என்கின்ற பாதிரியாரால் இது அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் இது கிரிகேரியன் புத்தாண்டு என்று அறியப்படுகிறது. அடுத்ததாக தெலுங்கு புத்தாண்டு என்று அறியப்பட்டாலும் கூட யுகாதி தெலுங்கு மக்களுக்கு மட்டுமல்லாமல் கன்ன

தெலுங்கு தமிழர் உறவு

Image
 இசுலாமிய படையெடுப்புகளிலிருந்து தென்னிந்தியாவை அரணாகக் காத்தது விஜயநகர சாம்ராஜ்யம். அதன் ஒப்பற்ற அரசர் கிருஷ்ண தேவராயர். அவர் தெலுங்கு, சம்ஸ்க்ருதம் மட்டுமன்றி தமிழ் மொழியையும் ஆதரித்துள்ளார். அவரைப் போற்றி மண்டல புருஷர் எனும் ஜைனர் தமிழ்ப்பாடல் இயற்றியுள்ளார்‌ (படத்தில் உள்ளது). அதே போல அரிதாசர் என்ற புலவர் இருசமய விளக்கம் என்ற நூலில் கிருஷ்ண தேவராயரைப் புகழ்ந்து பாடியுள்ளார் (படத்தைக் காண்க). 

சங்கத்தமிழும் சங்கதமும்!

Image
சங்கத்தமிழில் சங்கதத் தாக்கம் பொதுவாகவே உலகில் எந்த மொழியும் பிறமொழி கலப்பின்றி இருப்பதில்லை. அந்த வகையில் தமிழில் இன்றைய தேதிக்குப் பல மொழிச் சொற்களும் கலந்து உள்ளன. அவற்றுள் சங்கதம் எனப்படுகின்ற சம்ஸ்கிருத மொழியின் சொற்கள் அன்றாடப் பயன்பாட்டில் இன்றும் அதிகமாகவே இருக்கின்றன. தனித்தமிழ் இயக்கம் தோன்றிய பின்னர் பெருவாரியான சம்ஸ்கிருத சொற்கள் நம்முடைய பயன்பாட்டில் இருந்து அகன்று போயின. அச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் தமிழ் ஆர்வலர்களின் முயற்சியால் புழக்கித்திற்கு வந்தன.  வரலாற்றில் ஒரு மொழியின் சொற்கள் மற்ற மொழிகளில் கலப்பது பற்றி அறிந்து கொள்வதென்பது இன்றியமையாத ஒன்றாகிறது. அறிஞர் திரு. வையாபுரி பிள்ளை அவர்கள் ‘கழகம்’ என்ற சொல் வடமொழி மூலத்தை உடையது என்று ஒரு தனி கட்டுரையே எழுதி இருக்கிறார் என்றால் இதன் முக்கியத்துவத்தை உணரலாம். ஒருவகையில் இந்த கலப்பென்பது ஒரு முதிர்ந்த நாகரிகத்தின் அடையாளமாகக் கூட சொல்லலாம். பட்டினப்பாலையில் காவேரிப்பூம்பட்டினத்தில் பல்வேறு மொழி பேசிய வணிக மக்கள் வந்ததாக ஒரு குறிப்பு கிடைக்கிறது. வாணிபம், படையெடுப்பு, சமயப் பரவல் ஆகிய காரணங்களால் பிறமொழிச் சொற்க

தமிழரசர்களின் இமயப் படையெடுப்பு உண்மையா?

Image
தமிழரசர்கள் வட இந்தியா மீது படையெடுத்ததும், இமயம் வரை சென்று தங்கள் சின்னங்களைப் பொறித்ததும் நீண்ட காலமாகக் கூறப்பட்டு வரும் வெற்று நம்பிக்கைகள் என்று புறந்தள்ள இயலாது. சங்க இலக்கியத்திலிருந்து கலிங்கத்துப் பரணி வரை இதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம். கீழ்க்காணும் செய்திகள் தமிழ் அறிஞரான திரு. மு. இராகவ ஐயங்கார் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அன்னாரிலன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ’ஆராய்ச்சித் தொகுதி’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.  இனி ஆதாரங்களைப் பார்ப்போம்  பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியம் முழுக்கவே சேரரைப் பற்றிப் பாடுகிறது. அதில் ஒரு பத்துப் பாடல்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பற்றியவை. இவனது பெயரே இவன் இமையத்தை வரம்பாக அதாவது எல்லையாக உடையவன் என்பதைக் காட்டுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல் (11 வரி 23 - 25) தெளிவாக இச்சேர மன்னன் ஆரியரின் இமயம் முதல் தென் குமரி வரையுள்ள மொத்த பாரத நாட்டில் உள்ள எல்லா அரசரும் அஞ்சும்படி ஆண்டதாகக் கூறப்பட்டுள்ளது.  ”ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்  தென்னம் குமரியொடு ஆயிடை மன் மீக்கூறுநர் மறம் தப கடந்தே”   அதே

தமிழ் அரசர்களின் பூர்வீகம்

Image
 சங்க காலத்திலிருந்தே தமிழகத்தை ஆட்சி செய்த அரசர்களில் முக்கியமானவர்கள் சேர, சோழ, பாண்டியர். இவர்களைத் தவிர சிற்றரசர்களான வேளிர்கள் ஆகியோர்.  இவர்களின் முன்னோர் யார், பூர்வீகம் என்ன? படம் - ஆர்யவர்தம் என்று குறிப்படப்படும் பாரதத்தின் விந்திய மலைக்கு வடக்கே உள்ள பகுதி. இதுவே தமிழ் அரசர்களின் பூர்வீகமாகும்.  வேளிர்களின் பூர்வீகம்  இது பற்றி மாபெரும் தமிழ் அறிஞரான மு. இராகவ ஐயங்கார் அவர்களின் வேளிர் வரலாறு என்ற நூலில் எழுதியுள்ளார்.   புறநானூறு 201 அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றி செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை உவரா ஈகை துவரை ஆண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே விறல் போர் அண்ணல் தார் அணி யானை சேட்டு இரும் கோவே ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய ஒலியல் கண்ணி புலிகடிமாஅல்     இப்பாட்டில் புலவர் கபிலர் பாரி மகளிரை இருங்கோவேள் எனும் வேளிர் அரசனுக்கு அறிமுகப்படுத்துகிறார். அப்போது இருங்கோவேளின் முன்னோர் வடபால் முனிவனின் தடவில் தோன்றி செம்பினாலான துவாரகையை  49 தலைமுறைகள் ஆண்டவர்கள் என்கிறார். இதில் தடவு என்பது மலைகளால் சூழப்பட்ட இட