Posts

சங்கத்தமிழில் வாமன அவதாரம்- 47

Image
சங்கத்தமிழ்_ காட்டும்_சனாதனதர்மம்- 47 சங்கப்பாடல்களில் பல்வேறு இடங்களில் திருமால் போற்றப்படுகிறார். இதில் வாமன அவதாரக் குறிப்பும் உண்டு. முல்லைப்பாட்டு (1-3) நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்த மாஅல் போல தனது பெரிய கரங்களில் சங்கும், சக்கரமும் உடையவனாகிய திருமால் அன்றொருநாள் மஹாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு வந்து , தானமாகப் பெற கையில் தாரை நீரை வாங்கிக் கொண்டே... தனது குள்ள உருவிலிருந்து ப்ரமாண்டமாக த்ரிவிக்ரமனாக  வளர்ந்தார். அவரைப் போல கடலிலிருந்து நீரை உறிந்து கொண்டு வானத்தில் மழை மேகங்கள் எழுந்தன. இப்பாடல் மூலம்  வாமன அவதார நிகழ்வானது பண்டைய தமிழர் அறிந்து , பதிவு செய்துள்ளனர் என்பதை அறியலாம். இதே புராணச் செய்தியைத் திருவள்ளுவரும் பதிவு செய்கிறார். மடியிலா மன்னவன் எய்தும்டி அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. அதாவது சோம்பல் இல்லாத முயற்சியை உடைய அரசன் 'வாமனனாய் வந்து த்ரிவிக்ரமனாக வளர்ந்து' உலகளந்த உத்தமன் திருமால் தன் திருவடிகளால் அளந்த மூவுலகையும் கைப்பற்றுவான் என்கிறார். ஆக, திரும...

சங்கத்தமிழில் மஹாபாரதம் - 46

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 46 இதிஹாசங்கள் சனாதனதர்மத்தின் முக்கியமான அங்கங்களாகும், அதிலும் உலகின் மிகப் பெரிய காவியமான மஹாபாரதம், எண்ணற்ற அறங்களைத் தன்னுள் கொண்டதாகும். சங்க இலக்கியங்களில் மகாபாரதக் குறிப்புகள் பல உள்ளன. பெரும்பாணாற்றுப்படை (415 - 417) 'ஈர்ஐம் பதின்மரும் பொருது களத்து அவிய பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர் ஆராச் செருவின் ஐவர் போல' மன்னன் இளந்திரையனைப் புகழ வந்த புலவர்               'ஈர் ஐம்பது பேராகிய நூறு கௌரவர்களுடன் களத்திலே சண்டையிட்டு வென்ற பெரிய தேர்களை உடைய பாண்டவர்களைப் போல போர் என்றாலே வெற்றியை மட்டுமே கண்டவன்' என்று புகழ்கிறார். அதாவது இதிலிருந்து மிகத் தெளிவாக மகாபாரதக் கதை சங்கக்காலத்திலேயே தமிழரிடம் வழங்கி வரப் பெற்றது என்பதையும், மன்னர்களைப் பாண்டவரோடு ஒப்பிடுவதால், பாண்டவர்கள் பழந்தமிழரால் வெற்றி நாயகர்களாகக் கொண்டாடப் பட்டனர் என்பதையும் அறியலாம். மகாபாரதமானது பாரத மக்களின் ரத்தத்தில் ஊறிப் போனதாகும். அதனால் தான் சங்கக்காலம் தொடங்கி, இன்றும் தமிழரிடையே மிகப் பெரிய செல்வாக்குடன் வழங்கப் ப...

எது தமிழர் பண்டிகை?

Image
எது தமிழர் பண்டிகை? இதற்கான அளவீடு தமிழர்கள் மட்டுமே (வடநாட்டுக்காரர்கள் கொண்டாடாத)  கொண்டாடுகிற பண்டிகை என்பதல்ல... சங்கக்காலத்திலிருந்தோ அல்லது குறைந்தபட்சம் ஆயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தோ தமிழ் மண்ணில் கொண்டாடப்படும் பண்டிகைகள் என்பதே ஆகும். உதாரணமாக பழந்தமிழர் சந்திர நாள்காட்டியையே பயன்படுத்தினர், அதன்படி பௌர்ணமியே மாதப் பிறப்பு, எல்லா பௌர்ணமியும் விழா நடைபெற்றது. அதன்படி பார்த்தால் 'தமிழர் திருநாள்'  என்று கூறப்படும் பொங்கல் வெறும் 1000 வருட வரலாறே உடையது. சோழர்கள் சூர்ய நாள்காட்டியையே அறிமுகம் செய்த பின்பு தான் தைப் பொங்கல். அதுவும் வடக்கில் 'மகர சங்கராந்தி'. தைப் பூசமே சோழர்கள் சூர்ய நாட்காட்டி கொண்டு வரும் முன் வரை தை - 1. தை நீராடல் என்பது சங்கக்காலத் தமிழ் பாரம்பரியம்.. இன்றும் வடநாட்டில் 'பௌஷ்ய பூர்ணிமா' எனும் பெயரில் தைப்பூசத்தன்று புண்ணிய நதிகளில் நீராடுகின்றனர். தமிழருக்குப் பண்டிகை நாட்கள் பெரும்பாலும் பௌர்ணமியே.. அதன்படி.. மாசி மாதம் வரும் பௌர்ணமியே நாம் கொண்டாடும் மாசி மகம், இதை வடநாட்டில் கும்ப மேளாவாகக் கொண்டாடுகின்றனர். உல...

சங்கத்தமிழ்_காட்டும்_வீரஸ்வர்கம் - 45

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 45 வீரசுவர்கம் குறித்த நம்பிக்கைகள் இந்துக்களிடையே மிகுந்த வலிமை வாய்ந்தவை, போரில் வீரமரணம் அடையும் வீரன் வீரசுவர்கம் அடைவான் என்று பண்டைய தமிழ் மக்களும் நம்பினர். வட இந்தியர்களிடமும் இதே நம்பிக்கை உள்ளது. புறநானூறு 93 வரி 7-11 அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செவ்வுழி செல்க என வாழ்க போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ அதியமானது பெருமையைப் பாட வந்த ஔவையார் ' உன்னிடம் தோற்ற ஓடிய பகைவர்கள், போரில் இறக்காமல் பெருமை இழந்தனர் அதை ஈடுகட்ட அவர்கள் இறந்த பின் அறம்செய்கின்ற நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்கள், பசும்புல்லான தர்பையைப் பரப்பி, அதன் மீது அவர்களது (போரில் வீரமரணம் அடையாதவரது) உடலை வைத்து, வாளால் மார்பை வெட்டி, 'கழல் அணிந்த வீரமரணம் அடைந்த மறவர்கள் சென்ற வீரசுவர்கத்திற்கே நீயும் செல்வாயாக என்று வாழ்த்துவர். அத்தகைய இழி நிலை உனக்கில்லை, உன்னைப் பகைத்தவர்களுக்கு ஏற்பட்டது என்கிறார். ஆகவே, பாரத தேசம் முழுவதும் ஒரே மாதிரியான வீரசுவர்கம் குறித்த நம...

சங்கத்தமிழ்_காட்டும்_அந்தணர் - 44

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 44 பதிற்றுப்பத்து பாடல் எண் 24 வரி 6-9 ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றலென் றாறுபுரிந் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி ஞாலம் நின்வழி யொழுகப் பாடல்சான்று அதாவது வேதம் ஓதுதல், வேள்வி செய்தல், பிறரை வேதம் ஓதச் செய்தல், வேள்வி செய்ய வைத்தல், பிறர்க்கு ஈதல், தகுதியுடையோரிடம் தானம் பெறுதல் ஆகியவை அந்தணர்களுக்குரிய அறங்களாகும். இவற்றைப் பின்பற்றி வாழும் அந்தணர்கள் காட்டிய வழியில் செல்பவன், அவர்கள் கூறுவதை வழிமொழிந்து ஆண்டவன் சேரமன்னன், அவனது ஆணையை ஏற்று தான்  உலகமே நடக்கிறது என்று புலவர் போற்றுகிறார். ஆகவே, சங்கத்தமிழ் மக்களிடையே மன்னனே உயர்நிலை பெற்றவனாயினும், அவன் அறவழியில் செல்ல துணை நிற்க வேண்டியது அந்தணர்களே, இதுவே பிற்காலத்தில் 'வர்ணாஸ்ரம தர்மம்' என்ற பெயர் பெற்றது. ராஜகுரு என்பவரே அரசனுக்கு வழிகாட்டினார், அதனால் தான் அரசனும் தர்மத்தின் வழி நின்றான், மக்களும் இன்புற்று வாழ்ந்தனர். 

சங்கத்தமிழில் ஜோதிஷம் - 43

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 43 இன்றும் எந்த விஷயங்களையும் நாள், கோள் பார்த்துச் செய்வது இந்துக்களின் வழக்கமாகும். கிரக நிலை வைத்து இவ்வருடம் மழை எப்படி இருக்கும் என்று  இந்நாட்களில் கணிக்கிறோம்.  இது பண்டைய சங்கத்தமிழ் மக்களிடையே இருந்ததா? பார்ப்போம். பதிற்றுப்பத்து பாடல் எண் 13 வரி 25,26 அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது மழை வேண்டு புலத்து மாரிநிற்ப சேர நாட்டின் மழை வளமானது சேரமன்னனின் நல்லாட்சியில் சிறப்பாக இருந்தது என்பதைப் புலவர், வெள்ளி கிரகத்தோடு அழல் (செவ்வாய்) கிரகம் சேராமல் வேண்டிய இடங்களில் எல்லாம் மழை பெய்தது என்று கூறியுள்ளார். அதாவது சுக்கிரன் மழை தரும் கோள் ஆனால் அதனோடு செவ்வாய் கிரகம் ஒரே ராசியில்  சேர்ந்தால் மழை கெட்டுவிடும் - பெய்யாது. ஆனால் சேரமன்னனின் நல்லாட்சியில் அவ்வாறு நடக்கவில்லை, வேண்டிய இடத்தில் எல்லாம் நல்ல மழை பெய்தது என்று புலவர் தெளிவாக விளக்குகிறார். இவ்வளவு நுட்பமாக கோள் நிலையை ஆராய்ந்து, அதைப் பின்பற்றினர் சனாதனதர்மம் ஏற்றிருந்த சங்கத்தமிழ் மக்கள். ஆகவே, ஜோதிஷ சாஸ்திரம் என்பது வெறும் மூட நம்பிக்கை என்றோ, ஆரிய புர...

சங்கத்தமிழில் சிபிச்சக்ரவர்த்தி - 42

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 42 சோழ மன்னர்கள் யாருடைய மரபினர்? புறநானூறு பாடல் எண் 43 வரிகள் 7-10 கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக! இப்பாடலில் புலவர் சோழ மன்னன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை சிபிச் சக்ரவர்த்தியின் மரபில் வந்தவன் என்று கூறியுள்ளார். நற்றிணை - 16, அகநானூறு - 36 ஆகிய பாடல்கள் சோழர்களைச் செம்பியன் என்கின்றன. சிபி என்பதே செம்பியன் என்று திரிந்தது. இப்பாடல் சிபிச் சக்ரவர்த்தி புறாவைக் காப்பாற்ற தன் சதையைத் தந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது. உண்மைக் கதை- (சிபிச் சக்ரவர்த்தியின் ஈகை குணத்தின் புகழ் உலகெங்கும் பரவி இருந்தது.. ஆகவே அவனைச் சோதிக்க இந்திரன் புறாவாகவும், எமதர்ம ராஜன் கழுகாவும் மாறினர். கழுகு புறாவைத் துரத்தவே சிபியுடம் அடைக்கலம் அடைந்தது புறா, புறாவைக் காப்பாற்ற புறாவின் எடைக்கு நிகரான  தன் சதையை தந்தான் சிபி. தராசில் தன் சதையை எவ்வளவு வெட்டி வைத்தும் புறாவின் எடைக்கு நிகரான சதையைத் தர முடியாமல் தன்னையே, தன் முழு உடலையும் தந்தார் சிபி. சிபியை மெச்சி காட்ச...