சங்கத்தமிழில் ஜோதிஷம் - 43

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 43

இன்றும் எந்த விஷயங்களையும் நாள், கோள் பார்த்துச் செய்வது இந்துக்களின் வழக்கமாகும். கிரக நிலை வைத்து இவ்வருடம் மழை எப்படி இருக்கும் என்று  இந்நாட்களில் கணிக்கிறோம்.  இது பண்டைய சங்கத்தமிழ் மக்களிடையே இருந்ததா? பார்ப்போம்.



பதிற்றுப்பத்து பாடல் எண் 13 வரி 25,26

அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது
மழை வேண்டு புலத்து மாரிநிற்ப

சேர நாட்டின் மழை வளமானது சேரமன்னனின் நல்லாட்சியில் சிறப்பாக இருந்தது என்பதைப் புலவர், வெள்ளி கிரகத்தோடு அழல் (செவ்வாய்) கிரகம் சேராமல் வேண்டிய இடங்களில் எல்லாம் மழை பெய்தது என்று கூறியுள்ளார்.

அதாவது சுக்கிரன் மழை தரும் கோள் ஆனால் அதனோடு செவ்வாய் கிரகம் ஒரே ராசியில்  சேர்ந்தால் மழை கெட்டுவிடும் - பெய்யாது. ஆனால் சேரமன்னனின் நல்லாட்சியில் அவ்வாறு நடக்கவில்லை, வேண்டிய இடத்தில் எல்லாம் நல்ல மழை பெய்தது என்று புலவர் தெளிவாக விளக்குகிறார்.

இவ்வளவு நுட்பமாக கோள் நிலையை ஆராய்ந்து, அதைப் பின்பற்றினர் சனாதனதர்மம் ஏற்றிருந்த சங்கத்தமிழ் மக்கள்.

ஆகவே, ஜோதிஷ சாஸ்திரம் என்பது வெறும் மூட நம்பிக்கை என்றோ, ஆரிய புரட்டு என்றோ கூறுவது ஏற்கத்தக்கதல்ல. 

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்