சங்கத்தமிழ்_காட்டும்_காதல் தெய்வம்- 34
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்- 34
சங்கத்தமிழரின் காதல் கடவுள் யார்?
இதோ விடை
கலித்தொகை - பாடல் எண் 108
இனை வனப்பின், மாயோய்! நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி; நீ வருதி;
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத்
தலையினால் தொட்டு உற்றேன், சூள்.
பொருள்
தன் காதலியைப் பார்த்துக் காதலன் சொல்கிறான், "அழகிய என் காதலியே உனக்கு இணையான பெண் இன்னொருத்தி எனக்கில்லை, உன்னையே நான் காதலிக்கிறேன், நீ வருந்தாதே, இது உண்மை என்பதை 'மலைபோன்ற உறுதியான அழகிய மார்பினை உடைய திருமாலின் திருவடிகளை தலையில் வைத்து, இருகைகளால் தொட்டு சூளுரைக்கிறேன் என்கிறான்.
நாம் அறிந்துகொள்வது யாதெனின் சூளுரைத்து உறுதி செய்வது என்பது இன்றளவும் இந்துக்களிடையே காணப்படும் பண்பாகும், இன்றளவும் கிராமங்களில் இறைவன் மீது உண்மையாக என்று சூளுரைத்து நிரூபித்தல் நடைமுறையில் உண்டு. இது அக்காலத்திலிருந்தே இருந்த வழக்கமாகும். இங்கு தலைவன் திருமால் மீது சூளுரைக்கிறான்.திருமாலே அன்று முதல் இன்றுவரை பாரத தேசத்து மக்களுக்குக் காதல் தெய்வமாக இருக்கிறான்.
காதல் என்றவுடன் நினைவுக்கு வருவது 'ராதா கிருஷ்ணனே', அதனால் தான் ஆண்டாள் அவன்மீது காதல் கொண்டு திருப்பாவை பாடினாள். அதனால் தான் பாரதியும் விதம்விதமாக கண்ணனை வர்ணித்து காதல் கொண்டு பாடினார். இன்றும் நம் தமிழ் மக்களிடையே காதல் தெய்வமாக கண்ணனே உள்ளான், அதனால் தான் கண்ணனை வைத்து பல திரை இசைப்பாடல்களும் இன்றும் தொடர்கின்றன.
இது ஒட்டுமொத்த பாரத தேசத்தில் தெய்வீகக் காதலின் நாயகனாக கண்ணனே ஆண்டாண்டு காலமாக இருந்துள்ளான் என்பதற்குச் சாட்சியாகும்.

Comments
Post a Comment