சங்கத்தமிழ்_காட்டும்_கோவில் வழிபாடு - 32

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 32

இன்று எப்படி தமிழரிடத்தே விரதம், திருக்குளத்தில் நீராடுதல், மணியடித்தல், துளசி சாற்றுதல், இறை திருநாமத்தைச் சொல்லி ஆரவாரித்தல் என  ஆலய வழிபாடும், இறை நம்பிக்கையும் உள்ளனவோ ,அனைத்துமே 2000 வருடங்களுக்கு முன்னரே சங்கக்காலத்திலிருந்தே இருந்துள்ளன.

இடையில் வந்த ஆரிய கலாசாரம் என்றோ, சங்கத்தமிழர் நடுகல்லை மட்டுமே வணங்கினர் என்றோ திராவிட புராணங்கள் இனியும் பாட இயலாது.




சங்கக்காலத்தில் இறை வழிபாடு எப்படி இருந்தது?

பதிற்றுப்பத்து- 31 வரிகள் (1-10)

குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்குக
கைசுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால்வேறு நனந்தலை ஒருங்கெழுந்து ஒலிப்பத்
தெள்ளுயர் வடிமணி எறியுநர் கல்லென

உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்டூது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
வண்பொரு திகிரிக் கமழ்குரல் துழாஅய்
அலங்கம் செல்வன் சேவடி பரவி
நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர

குன்றுகளால் சூழப்பட்டு, கடலை ஆடையாக உடுத்தியது இந்த நிலம். இங்கே திருமால் ஆலயத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இருகரங்களைத் தலைமேல் சுமந்து, தங்கள் வேண்டுதலையும், துன்பங்களையும் கூறி வணங்கும் ஒலி நான்கு திசைகளிலும் பரவுகிறது, அப்போது ஆலய மணி 'கல்' என்று ஒலிக்கப்படுகிறது. மக்கள் ஆரவாரிக்கின்றனர். உண்ணா நோம்பு மேற்கொண்ட பக்தர்கள் குளிர்ந்த நீரோடைகளில் குளித்து இறைவனை தரிசிக்க வர்கின்றனர். வண்டு மொய்க்கும் தேன் நிறைந்த மாலை அணிந்த மார்பில் திருமகளும் நிலைபெற்றுள்ளாள், திருத்துளாய் (துளசி) மாலை அணிசெய்கிறது. காண்போர் கண்கூசம் சக்கரப்படை திருமாலின் கையில் உள்ளது. இவற்றைக் கண்டு திருமாலின் சேவடிகளைத் தொழுது பக்தர்கள் மன ஆறுதல் அடைந்து தங்கள் ஊருக்குச் சென்றனர்.









Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்