சங்கத்தமிழ்_த்ரிபுரசம்ஹாரம் - 40

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 40






புறநானூறு பாடல் எண்- 55, வரிகள் (1-5)

ஓங்கு மலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி 
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த 
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப் 
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல

சங்கக்காலத் தமிழரிடம் புராணக் கதைகள் பெரிதும் செல்வாக்கு பெற்றிருந்தன. பாண்டியன் நன்மாறனை இவ்வாறு போற்றுகிறார் புலவர்  ' மலையை (மேரு மலையை) வில்லாகவும், பாம்பை (வாசுகிப் பாம்பை) நாணாகவும் ஒரே கணையைக் கொண்டு மூன்று கோட்டை அசுரர்களையும், வீழ்த்தி தேவர்களுக்கு வெற்றியைத் தந்தவனும்,  நீலக் கறையுடைய கழுத்து உடையவனுமான சிவபெருமானின் பிறை போன்ற அழகிய நெற்றியிலிருக்கும் கண்ணைப் போன்ற சிறப்பு வாய்ந்தவன் என்கிறார்.

இதிலிருந்து பண்டைய தமிழரிடத்தே புராண மரபுக்கதைகள் செல்வாக்கு பெற்றிருந்ததை அறிய முடிகிறது. 

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்