சங்கத்தமிழ்_காட்டும்_புராணச்செய்தி - 35

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்- 35



சங்கக்காலத் தமிழ் மக்களிடம் மிகுதியாக புராணக் கதைகள் வழங்கி வரப்பெற்றன. அவ்வப்போது புலவர்களின் உவமைகளுக்கு அவை பயன்படுத்தப்பட்டன. பின்வரும் பாடலில் வரும் புராண உவமை சம்ஸ்கிருத ஸ்ரீமத் பாகவத புராணத்திலேயே காணப்படாத அரிய தகவலாகும். இதன்மூலம் தமிழர்கள் புராணங்களை ஆதரித்தனர் என்ற உண்மை புலப்படும்



புறநானூறு பாடல் 174 வரிகள் (1-5)

அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பை கொள் பருவரல் தீர கடுந்திறல்
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு.

திருக்கண்ணன் எனும் சோழ அரசன் சோழ மரபை மீட்டெடுத்த செய்தியைப் பாடவந்த புலவர் அவனை திருமாலோடு ஒப்பிடுகிறார். அன்றொரு நாள் தேவாசுர யுத்தம் வரவே, இரவும் பகலும் அவர்கட்கு இடையூறுசெய்யவே, அசுரர்கள் ஞாயிற்றை மறைத்து வைத்தனர், உயிர்கள் துன்புற்றன. அதனால், காக்கும் கடவுளான நாராயணன் அசுரரை அழித்து ஞாயிற்றை மீட்டெடுத்து நிறுவினார். அதைப் போல இருண்ட காலத்தில் சோழ மரபை மீட்டெடுத்தவன் திருக்கண்ணன் ஆவான்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்