சங்கத்தமிழ்_காட்டும்_முருகவழிபாடு - 41

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 41

சங்கக்காலத்தில் முருக வழிபாடு பற்றிக் காண்போம்





திருமுருகாற்றுப்படை பாடல் வரிகள் 181-189

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன் அதான்று







ஏரகம் எனும் படை வீட்டில் உறையும் முருகப்பெருமானை 'மூன்று வகையான தீயை - யாகம் வளர்ப்போரும், ஒன்பது நூலை மூன்றாக்கி முப்புரி நூலணிந்த, இரு பிறப்பாளர்களாகிய அந்தணர்கள், ஈரம் உலரா ஆடையுடன், தலை மீது கைக்கூப்பி, ஆறெழுத்து மந்திரமான' சரவண பவ 'என்பதன் பொருளடங்கிய வேதங்களைப் பாடி, நறுமணம் மிக்க மலர்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பர். 


இப்பாடல் மூலம் யாகம் செய்யும், பூணூல் அணியும் ப்ராமணர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் இருந்ததையும், சரவண பவ என்று மந்திரங்களைச் சொல்லி முருகப்பெருமானை வணங்கினர் என்பதையும் அறியமுடிகிறது. 

ஆகவே, அந்தணரோ, அழியா மறையோ, மந்திர உட்சாடனங்களோ தமிழ்ப் பண்பாட்டிற்கு அந்நியமல்ல இவை அனைத்தும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளே!!!  



Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்