சங்கத்தமிழில் மாலும் மன்னவனும்-37

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-37






புறநானூறு பாடல் 57 வரிகள் 1-3

"வல்லார் ஆயினும் , வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற"

அதாவது வலிமை உடையவர், வலிமை இல்லாதவர் என்று பேதம் பார்க்காது
தன்னைப் புகழ்ந்தோர் அனைவரையும் ஆதரித்துப் காப்பவன் பாண்டியன் நன்மாறன் ஆவான். அவனது இத்தகைய குணம் தன் பக்தர்களிடம் எவ்வித வேற்றுமையும் காட்டாமல், தன்னை நம்பினோரைக் காக்கின்ற திருமாலின் குணத்தை ஒத்ததாய் உள்ளது என்கிறார் புலவர்.

அதாவது இறைவன் முன் பக்தர்கள் அனைவரும் சமம். பக்தன் பாமரனா , பண்டிதனா , செல்வந்தனா , வறியவனா என்று பகவான் பார்ப்பது இல்லை. அதற்குச் சிறந்த உதாரணம் இன்றும்  இவ்வளவு செல்வம் குவியும் திருப்பதியில் எம்பெருமானுக்கு மரபுப்படி மண்சட்டியில் வைத்த தயிர்சாதமே முக்கிய நைவேத்யம் ஆகும்.

இதன்மூலம் சங்கத்தமிழரது கடவுட் கொள்கை இன்றுள்ளது போன்றே அன்றும் இருந்தது என்று துணிந்து கூறலாம். 

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்