சங்கத்தமிழ்_காட்டும்_அந்தணர் - 44

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 44




பதிற்றுப்பத்து பாடல் எண் 24 வரி 6-9

ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றலென் றாறுபுரிந் தொழுகும்
அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி
ஞாலம் நின்வழி யொழுகப் பாடல்சான்று

அதாவது வேதம் ஓதுதல், வேள்வி செய்தல், பிறரை வேதம் ஓதச் செய்தல், வேள்வி செய்ய வைத்தல், பிறர்க்கு ஈதல், தகுதியுடையோரிடம் தானம் பெறுதல் ஆகியவை அந்தணர்களுக்குரிய அறங்களாகும். இவற்றைப் பின்பற்றி வாழும் அந்தணர்கள் காட்டிய வழியில் செல்பவன், அவர்கள் கூறுவதை வழிமொழிந்து ஆண்டவன் சேரமன்னன், அவனது ஆணையை ஏற்று தான்  உலகமே நடக்கிறது என்று புலவர் போற்றுகிறார்.

ஆகவே, சங்கத்தமிழ் மக்களிடையே மன்னனே உயர்நிலை பெற்றவனாயினும், அவன் அறவழியில் செல்ல துணை நிற்க வேண்டியது அந்தணர்களே, இதுவே பிற்காலத்தில் 'வர்ணாஸ்ரம தர்மம்' என்ற பெயர் பெற்றது. ராஜகுரு என்பவரே அரசனுக்கு வழிகாட்டினார், அதனால் தான் அரசனும் தர்மத்தின் வழி நின்றான், மக்களும் இன்புற்று வாழ்ந்தனர். 

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்