Posts

சங்கத்தமிழ்_காட்டும்_வீரஸ்வர்கம் - 45

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 45 வீரசுவர்கம் குறித்த நம்பிக்கைகள் இந்துக்களிடையே மிகுந்த வலிமை வாய்ந்தவை, போரில் வீரமரணம் அடையும் வீரன் வீரசுவர்கம் அடைவான் என்று பண்டைய தமிழ் மக்களும் நம்பினர். வட இந்தியர்களிடமும் இதே நம்பிக்கை உள்ளது. புறநானூறு 93 வரி 7-11 அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செவ்வுழி செல்க என வாழ்க போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ அதியமானது பெருமையைப் பாட வந்த ஔவையார் ' உன்னிடம் தோற்ற ஓடிய பகைவர்கள், போரில் இறக்காமல் பெருமை இழந்தனர் அதை ஈடுகட்ட அவர்கள் இறந்த பின் அறம்செய்கின்ற நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்கள், பசும்புல்லான தர்பையைப் பரப்பி, அதன் மீது அவர்களது (போரில் வீரமரணம் அடையாதவரது) உடலை வைத்து, வாளால் மார்பை வெட்டி, 'கழல் அணிந்த வீரமரணம் அடைந்த மறவர்கள் சென்ற வீரசுவர்கத்திற்கே நீயும் செல்வாயாக என்று வாழ்த்துவர். அத்தகைய இழி நிலை உனக்கில்லை, உன்னைப் பகைத்தவர்களுக்கு ஏற்பட்டது என்கிறார். ஆகவே, பாரத தேசம் முழுவதும் ஒரே மாதிரியான வீரசுவர்கம் குறித்த நம...

சங்கத்தமிழ்_காட்டும்_அந்தணர் - 44

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 44 பதிற்றுப்பத்து பாடல் எண் 24 வரி 6-9 ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றலென் றாறுபுரிந் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி ஞாலம் நின்வழி யொழுகப் பாடல்சான்று அதாவது வேதம் ஓதுதல், வேள்வி செய்தல், பிறரை வேதம் ஓதச் செய்தல், வேள்வி செய்ய வைத்தல், பிறர்க்கு ஈதல், தகுதியுடையோரிடம் தானம் பெறுதல் ஆகியவை அந்தணர்களுக்குரிய அறங்களாகும். இவற்றைப் பின்பற்றி வாழும் அந்தணர்கள் காட்டிய வழியில் செல்பவன், அவர்கள் கூறுவதை வழிமொழிந்து ஆண்டவன் சேரமன்னன், அவனது ஆணையை ஏற்று தான்  உலகமே நடக்கிறது என்று புலவர் போற்றுகிறார். ஆகவே, சங்கத்தமிழ் மக்களிடையே மன்னனே உயர்நிலை பெற்றவனாயினும், அவன் அறவழியில் செல்ல துணை நிற்க வேண்டியது அந்தணர்களே, இதுவே பிற்காலத்தில் 'வர்ணாஸ்ரம தர்மம்' என்ற பெயர் பெற்றது. ராஜகுரு என்பவரே அரசனுக்கு வழிகாட்டினார், அதனால் தான் அரசனும் தர்மத்தின் வழி நின்றான், மக்களும் இன்புற்று வாழ்ந்தனர். 

சங்கத்தமிழில் ஜோதிஷம் - 43

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 43 இன்றும் எந்த விஷயங்களையும் நாள், கோள் பார்த்துச் செய்வது இந்துக்களின் வழக்கமாகும். கிரக நிலை வைத்து இவ்வருடம் மழை எப்படி இருக்கும் என்று  இந்நாட்களில் கணிக்கிறோம்.  இது பண்டைய சங்கத்தமிழ் மக்களிடையே இருந்ததா? பார்ப்போம். பதிற்றுப்பத்து பாடல் எண் 13 வரி 25,26 அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது மழை வேண்டு புலத்து மாரிநிற்ப சேர நாட்டின் மழை வளமானது சேரமன்னனின் நல்லாட்சியில் சிறப்பாக இருந்தது என்பதைப் புலவர், வெள்ளி கிரகத்தோடு அழல் (செவ்வாய்) கிரகம் சேராமல் வேண்டிய இடங்களில் எல்லாம் மழை பெய்தது என்று கூறியுள்ளார். அதாவது சுக்கிரன் மழை தரும் கோள் ஆனால் அதனோடு செவ்வாய் கிரகம் ஒரே ராசியில்  சேர்ந்தால் மழை கெட்டுவிடும் - பெய்யாது. ஆனால் சேரமன்னனின் நல்லாட்சியில் அவ்வாறு நடக்கவில்லை, வேண்டிய இடத்தில் எல்லாம் நல்ல மழை பெய்தது என்று புலவர் தெளிவாக விளக்குகிறார். இவ்வளவு நுட்பமாக கோள் நிலையை ஆராய்ந்து, அதைப் பின்பற்றினர் சனாதனதர்மம் ஏற்றிருந்த சங்கத்தமிழ் மக்கள். ஆகவே, ஜோதிஷ சாஸ்திரம் என்பது வெறும் மூட நம்பிக்கை என்றோ, ஆரிய புர...

சங்கத்தமிழில் சிபிச்சக்ரவர்த்தி - 42

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 42 சோழ மன்னர்கள் யாருடைய மரபினர்? புறநானூறு பாடல் எண் 43 வரிகள் 7-10 கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக! இப்பாடலில் புலவர் சோழ மன்னன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை சிபிச் சக்ரவர்த்தியின் மரபில் வந்தவன் என்று கூறியுள்ளார். நற்றிணை - 16, அகநானூறு - 36 ஆகிய பாடல்கள் சோழர்களைச் செம்பியன் என்கின்றன. சிபி என்பதே செம்பியன் என்று திரிந்தது. இப்பாடல் சிபிச் சக்ரவர்த்தி புறாவைக் காப்பாற்ற தன் சதையைத் தந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது. உண்மைக் கதை- (சிபிச் சக்ரவர்த்தியின் ஈகை குணத்தின் புகழ் உலகெங்கும் பரவி இருந்தது.. ஆகவே அவனைச் சோதிக்க இந்திரன் புறாவாகவும், எமதர்ம ராஜன் கழுகாவும் மாறினர். கழுகு புறாவைத் துரத்தவே சிபியுடம் அடைக்கலம் அடைந்தது புறா, புறாவைக் காப்பாற்ற புறாவின் எடைக்கு நிகரான  தன் சதையை தந்தான் சிபி. தராசில் தன் சதையை எவ்வளவு வெட்டி வைத்தும் புறாவின் எடைக்கு நிகரான சதையைத் தர முடியாமல் தன்னையே, தன் முழு உடலையும் தந்தார் சிபி. சிபியை மெச்சி காட்ச...

சங்கத்தமிழ்_காட்டும்_முருகவழிபாடு - 41

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 41 சங்கக்காலத்தில் முருக வழிபாடு பற்றிக் காண்போம் திருமுருகாற்றுப்படை பாடல் வரிகள் 181-189 மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல, ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புலர உடீஇ, உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து ஏரகத்து உறைதலும் உரியன் அதான்று ஏரகம் எனும் படை வீட்டில் உறையும் முருகப்பெருமானை 'மூன்று வகையான தீயை - யாகம் வளர்ப்போரும், ஒன்பது நூலை மூன்றாக்கி முப்புரி நூலணிந்த, இரு பிறப்பாளர்களாகிய அந்தணர்கள், ஈரம் உலரா ஆடையுடன், தலை மீது கைக்கூப்பி, ஆறெழுத்து மந்திரமான' சரவண பவ 'என்பதன் பொருளடங்கிய வேதங்களைப் பாடி, நறுமணம் மிக்க மலர்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பர்.  இப்பாடல் மூலம் யாகம் செய்யும், பூணூல் அணியும் ப்ராமணர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் இருந்ததையும், சரவண பவ என்று மந்திரங்களைச் சொல்லி முருகப்பெருமானை வணங்கினர் என்பதையும் அறியமுடி...

சங்கத்தமிழ்_த்ரிபுரசம்ஹாரம் - 40

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 40 புறநானூறு பாடல் எண்- 55, வரிகள் (1-5) ஓங்கு மலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி  பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த  கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்  பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல சங்கக்காலத் தமிழரிடம் புராணக் கதைகள் பெரிதும் செல்வாக்கு பெற்றிருந்தன. பாண்டியன் நன்மாறனை இவ்வாறு போற்றுகிறார் புலவர்  ' மலையை (மேரு மலையை) வில்லாகவும், பாம்பை (வாசுகிப் பாம்பை) நாணாகவும் ஒரே கணையைக் கொண்டு மூன்று கோட்டை அசுரர்களையும், வீழ்த்தி தேவர்களுக்கு வெற்றியைத் தந்தவனும்,  நீலக் கறையுடைய கழுத்து உடையவனுமான சிவபெருமானின் பிறை போன்ற அழகிய நெற்றியிலிருக்கும் கண்ணைப் போன்ற சிறப்பு வாய்ந்தவன் என்கிறார். இதிலிருந்து பண்டைய தமிழரிடத்தே புராண மரபுக்கதைகள் செல்வாக்கு பெற்றிருந்ததை அறிய முடிகிறது. 

சங்கத்தமிழ்_காட்டும்_சிவவழிபாடு - 39

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 39 சங்கக்காலத் தமிழர் சிவபெருமானைப் போற்றினர். முருகன் மட்டுமே தமிழ்க் கடவுள் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. புறநானூறு பாடல் எண்-91 வரிகள் (5-7) பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீல மணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும நீயே இப்பாடல் ஔவையார் அதியமானைப் போற்றிப் பாடியது . பால் போன்ற வெண்ணிறம் உடைய பிறையினைச் சூடியவனும் , பிறையினைப் போன்ற நெற்றி உடையவனும் , நீல நிற கழுத்தை உடையவனுமான சிவபெருமானைப் போல் உன் புகழும் நிலைபெறட்டும் என்று அதியமானைப் போற்றி ஔவையார் பாடியது. இதிலிருந்து நாம் அனைவரும் அறிந்து கொள்வது யாதெனில் சிவபெருமானை இன்று நாம் வணங்கும் உருவில் தான் சங்கத்தமிழரும் வணங்கினர், இடையே வந்த ஆரியப் புரட்டு என்று எதுவுமில்லை.