Posts

சங்கத்தமிழில் உலகத் தோற்றம்-19

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-19 உலகின் தோற்றமும் ஒடுக்கமும் பற்றிய விஞ்ஞானப் பார்வை மெய்ஞ்ஞானத்தின் வடிவில். Bigbang theory illustrated in Tamil sangam literature- paripadal பாடல்:- தீசெங் கனலியும் கூற்றமும் ஞமனும் மாசில்ஆ யிரங்கதிர் ஞாயிறும் தொகூஉம் ஊழி ஆழிக்கண் இருநிலம் உருகெழு  கேழாய் மருப்பின் உழுதோய் எனவும் மாவிசும்பு ஒழுகுபுனல் வறள அன்னச் சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய் எனுவும் ஞாலத்து உரையுந் தேவரும் வானத்து நாலெண் தேவரும் நயந்துநிற் பாடுவோர் பாடும் வகையே எம்பாடல் தாமப் பாடுவார் பாடும் வகை! பரிபாடல் 25-30. பொருள்:- இந்த அண்டமானது அழியும் #ஊழிக்காலத்தில் எல்லாவற்றையும் தன்னுள் ஒடுக்கும் பெருநெருப்பாக இருப்பவனே, திருமாலே, ஆயிரம் கதிருடைய சூரியனும் நீயே, உயிர்களுக்கு விதியாக இருப்பவனே!  இவ்வுழிக்கால்ததில் பூமியைப் பன்றி (வராஹ அவதாரம் ) உருவெடுத்து வெள்ளத்திலிருந்து மீட்டவனே!! பெருமழையால் ஆழி சூழ்ந்த உலகை அன்னப்பறவையின் உருவெடுத்து சிறகால் காத்தவனே! நின்னை அனைத்து தேவாதி தேவர்களும் தொழுது வணங்குகின்றனர்.அடியனும் உன்னை அவ்...

விநாயகர் இந்து மதத்திற்கும், இந்தியாவுக்கும் மட்டுமே உரியவரா?

Image
விநாயகர் இந்து மதத்திற்கும், இந்தியாவுக்கும் மட்டுமே உரியவரா? இல்லை.... பௌதத்திலும், சமணத்திலும் அவருக்கு உயரிய இடம் உள்ளது. கணேஷ சஹஸ்ரநாமமத்தில் புத்தா என்பதே விநாயகரின் பெயராக வருகிறது. ஸ்வேதாம்பர ஜைனர்கள் கடவுளர்களுக்கே கடவுளாக விநாயகரைப் போற்றுகின்றனர். ரோமானிய கடவுளான ஜானஸ் (இருமுகம் உடையவர்) நமது விநாயகரின் ஒரு வடிவமான 'த்விமுக விநாயகரோடு' நெருங்கிய தொடர்பு உள்ளது. இலங்கை, பாகிஸ்தான், சீனா, திபெத், மங்கோலியா, பர்மா, கம்போடியா, ஜாவா, சுமத்ரா, வியட்னாம் ஆகிய நாடுகளில் விநாயகர் இன்று வரை வணங்கப்படுகிறார். ஜப்பானில் 'காங்கிடென்' என்ற பெயரில் போற்றப்படுகிறார். இந்தோனேசியாவில் ரூபாய் நோட்டிலும், பல்கலைக்கழக முத்திரையில் அருளுகிறார். அகண்ட பாரத தேசத்தின் அடையாளமாக, பெரிதும் போற்றப்படும் தெய்வமாக நமது பிள்ளையார் விளங்குகிறார். . விநாயகர் தடைகளை நீக்கும் கடவுளாக வணங்கப்படுகிறார். பாரத தேசம் மட்டுமின்றி அகண்ட பாரதத்திலும் தன் ஆதிக்கம் செலுத்துகிறார். இதோ தாய்லாந்து நாட்டில் உள்ள பிரமாண்டமான கணபதி சிலை. இந்தோனேசியாவின் பாலித் தீவில் இன்றளவும் இந்துதர்மமே பின...

எந்நாட்டவர்க்கும் இறைவன் எம் முருகன்!!!

Image
முருகப் பெருமான் தமிழருக்கு மட்டும் கடவுள் அல்ல...இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் அவர் வணங்கப்படுகிறார்!  வங்காள முருகன்  உதாரணமாக வங்காளத்தில் துர்கா பூஜையின் போது முருகனை வணங்குவர்! அங்கு கார்த்திகேயன் என்ற பெயர் அவருக்கு! முருகன் கிரேக்க, ரோமானியர்க்கும் தலைவனா? சங்க இலக்கியங்கள் முருகனை வெற்றியின் தெய்வமாகக் காட்டுகின்றன. சம்ஸ்கிருத இலக்கியங்களும் முருகனை அசுரர்களை வெல்ல வந்தவன் என்றும், தேவர்களின் சேனாதிபதி என்றும் குறிப்பிடுகின்றன. முருகன் போர்த்தெய்வமாக காட்டப்படுகிறார், தீயிலிருந்து தோன்றியராகவும், ஜோதிடத்தில் செவ்வாயின் அதிபதியாகவும் காட்டப்படுகிறார். செவ்வாய் மேஷ ராசியின் அதிபதி, மேஷம் என்பத ு ஆடாகும், சில ஆலயங்களில் முருகனுக்கு ஆடு வாகனம் காட்டப்படுகிறது. முருகன் இந்துமதத்தின் ப்ரதான தெய்வமான சிவனது மகன். அவரது நெற்றிக்கண் நெருப்பிலிருந்து வந்த சிவந்த மேனியன் என்கின்றன புராணங்கள். அதேபோல் கிரேக்க தெய்வம் ஏரிஸ் (ஆங்கிலத்தில் மேஷ ராசியை ஏரிஸ் என்பர்) ஜீயுஸ் எனும் தலைமைக்கடவுளின் மகன். (ஜீயுஸ் என்பது ஜூபிடர்- வியாழனைக் குறிக்கும். நமத...

சங்கத்தமிழில் அணுக் கொள்கையும் ஆன்மிகமும் - 18

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-18 அணுக்கொள்கையை வகுத்தவன் தமிழனே!!! இதோ ஆதாரம். திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து அகன்றோடி நின்னஞ்சிக் கடற்பாய்ந்த பிணிநெகிழ்பு அவிழ்தண்தார் அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ; அதனால் பகைவர் இவர், இவர் நட்டோர் என்னும் வகையும் உண்டோ, நின் மரபறி வோர்க்கே? (பரிபாடல்-55). பொருள்- திரண்ட அணுக்கூட்டங்களால் ஆனது இந்த உலகம். இதனை நீ (திருமால்) உன் திருவடியால் முன்னொரு காலத்தில் அளந்தாய் (வாமன அவதாரம்). உன் உருவைக் கண்டு கலங்கிய அவுணர் (அசுரர்கள்) சிதறி ஓடினர், அவர்களுள் உன்னைச் சரணடைந்தோர்க்கும் நீயே முதல்வன் ஆகிறாய். அதனால், உனக்குப் பகை என்பதும், நட்பென்பதும் கிடையாது. இதனை உனது மரபை அறிந்தோர் நன்றாக அறிவர். தெளிவுறை: இறைவன் என்பவன் அனைவருக்கும் முதலானவன், பொதுவானவன். அவன் தன்னைச் சரணடைந்தோரைக் காப்பான். அதாவது தீய குணமுள்ள அரக்கர்களைப் போன்ற மனிதராயினும் தம் தவறுணர்ந்து இறைவனிடம் சரணடைந்தால், அவன் தீயோரையும் நல்லோராக்கிக் காப்பான் என்ற சனாதனதர்மக் கருத்தை இப்பாடல் நிறுவுகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பரிபாடலில...

சங்கத்தமிழ் காட்டும் பக்தி - 17

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-17 பக்தி இலக்கியங்களின் முன்னோடி சங்க இலக்கியங்களே! உதாரணமாக இப்பரிபாடலை எடுத்துக் கொள்வோம். அன்னை என நினைஇ நின் அடி தொழுதனெம் அன் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம் முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால் இன்னும் இன்னும் எம் காமம் இதுவே. (பரிபாடல்-64).  பொருள்-  முற்பிறப்புக்களில் நாங்கள் செய்த தவத்தால் உன்னை அன்னை எனக் கருதி பலமுறையும் உன் தாளைத்தொழுது வணங்கும் பேறு பெற்றோம்! உன்னைப் பலமுறையும் வாழ்த்தி இறைஞ்சுகிறோம்! இனி வரும் பிறவிகளிலும் இவ்வாறே நாங்கள் இருப்பதையே விரும்புகின்றோம். அவ்வண்ணமே அருள்வாயாக! சனாதன இந்து தர்மத்தின் சிறப்பம்சமே 'இறைவனைத் தான் விரும்பும் உருவாகவும், உறவாகவும் காணலாம்' என்பதே. இறைவனை தம் நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் காண்பதை 'நாயகி பாவம்' என்போம். இதையே ஆண்டாள் தன் திருப்பாவையில் கையாண்டாள். சைவர்கள் சிவனை 'தாயுமானவராகக்' காண்கின்றனர். அதைப்போலவே இப்பாடல் திருமாலை நம் தாயாகக் காட்டுகிறது. இதன் மூலமாக சங்கக்காலத்திலேயே பக்தியில் தமிழர் சிறந்திருந்ததை உணரலாம்.ஆக, சங்கத்தம...

சங்கத்தமிழ் காட்டும் ஜோதிஷம்-16

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-16 வைகை வெள்ளத்திற்குக் ஜாதகம் கணித்த சங்கப்புலவன். ஜோதிட சாஸ்திரம் என்பது இந்துக்கள் வாழ்வியலில் இரண்டறக் கலந்ததாகும், இதன் அடிப்படையே வான சாஸ்திரம் ஆகும்.இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழர் கொண்டிருந்த வானவியல், ஜோதிட அறிவை பரிபாடலில் ஆசிரியர் நல்லந்துவனார் கூறுகிறார். விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் உருகெழு வெள்ளிவந்து ஏற்றியல் சேர வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருள்தெரி புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல் அங்கி உயர்நிற்ப அந்தணன் பங்குவின் இல்லத் துணைக்குப் பால்எய்த இறையமன் வில்லிற் கடைமகரம் ஏவப் பாம்பொல்லை மதிய மறைய வருநாளில் வாய்ந்த பொதியின் முனிவன் புரைவரைக் கீறி மிதுனம் அடைய விரிகதிர் வேனில் எதிர்வரவு மாரி இயைக என இவ்வாற்றால் புரைகெழு சையம் பொழிமழை தாழ நெரிதரூஉம் வையைப் புனல்… வைகையில் புதுவெள்ள வருகைக்கு ஜாதகம் கணித்திருக்கிறார் ஆசிரியர் நல்லந்துவனார். ஆற்று வெள்ளம் பயனுடையதாக இருக்குமா வேறு விதமாக இருக்குமா என்று தெரிந்...

சங்கத்தமிழ் காட்டும் திருக்கார்த்திகை-15

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-15 திருக்கார்த்திகை தீபம் இறைவனை ஒளிவடிவமாக காண்பது பாரத தேசத்திலிருந்தே பிறந்த வழக்கமாகும். வடக்கே தீபாவளி போல தமிழ்நாட்டில் கார்த்திகை. திருக்கார்த்திகை திருவிழா பல்வேறு புராணப் பின்னணிகளை உடையது, அகநானூற்றில் வரும் இப்பாடல் பழந்தமிழர் கார்த்திகை விழா கொண்டாடியதைக் காட்டுகிறது. மழைக்கால் நீங்கிய மாசறு விசும்பின் குறுமுயல் மறுநிறம் கிளர் மதிநிறைந்து அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுடன் அயர’’ (அகம்., பா.எ., 141). அக்னியை, தீப ஒளியை கடவுளாகக் காண்பது வேத உபநிஷதங்களிலும் உள்ள வழக்கமாகும். உபநிஷதங்களிலேயே மிகவும் பழையது #பிருஹதாரண்யக உபநிஷத்! அதில்“இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்” -- என்று வேண்டுகிறோம் (தமஸோ மா ஜோதிர் கமய). ஆக, இன்றும் வடநாட்டில் குறிப்பாக காசியில் கார்த்திகை பௌர்ணமி தேவதீபாவளி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. ஜைன மதத்தவரும் இதைக் கொண்டாடுகின்றனர். அதனால் வடக்கு, தெற்கு என்ற பாகுபாடின்றி ஒட்டுமொத்த பாரததேசத்தில் கொண்டாடப் பெறும் கார்...