சங்கத்தமிழ் காட்டும் பக்தி - 17

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-17

பக்தி இலக்கியங்களின் முன்னோடி சங்க இலக்கியங்களே!

உதாரணமாக இப்பரிபாடலை எடுத்துக் கொள்வோம்.

அன்னை என நினைஇ நின் அடி தொழுதனெம்

அன் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்

முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்

இன்னும் இன்னும் எம் காமம் இதுவே. (பரிபாடல்-64).

 பொருள்-
 முற்பிறப்புக்களில் நாங்கள் செய்த தவத்தால் உன்னை அன்னை எனக் கருதி பலமுறையும் உன் தாளைத்தொழுது வணங்கும் பேறு பெற்றோம்! உன்னைப் பலமுறையும் வாழ்த்தி இறைஞ்சுகிறோம்! இனி வரும் பிறவிகளிலும் இவ்வாறே நாங்கள் இருப்பதையே விரும்புகின்றோம். அவ்வண்ணமே அருள்வாயாக!



சனாதன இந்து தர்மத்தின் சிறப்பம்சமே 'இறைவனைத் தான் விரும்பும் உருவாகவும், உறவாகவும் காணலாம்' என்பதே. இறைவனை தம் நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் காண்பதை 'நாயகி பாவம்' என்போம். இதையே ஆண்டாள் தன் திருப்பாவையில் கையாண்டாள்.

சைவர்கள் சிவனை 'தாயுமானவராகக்' காண்கின்றனர். அதைப்போலவே இப்பாடல் திருமாலை நம் தாயாகக் காட்டுகிறது. இதன் மூலமாக சங்கக்காலத்திலேயே பக்தியில் தமிழர் சிறந்திருந்ததை உணரலாம்.ஆக, சங்கத்தமிழ் காட்டும் வாழ்க்கை நெறி சனாதனதர்மமே எனத் துணிந்து கூறலாம்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்