சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம்-2 - விஷ்ணு

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-2

பரிபாடல் எனும் எட்டுத் தொகை நூல்
எல்லாப் பொருளும், பொருளின் தன்மையும் திருமால் என்பதை,

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ

(பரி. 3:63-68)

எனப் போற்றுகின்றார் புலவர் கடுவன் இளவெயினனார்.

(தெறல் = வெம்மை, நாற்றம் = மணம், மணி = நீலமணி, மறம் = வீரம், வாய்மை = உண்மை,மைந்து = வலிமை, பூதம் = நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய ஐம்பூதங்கள், வெஞ்சுடர் = சூரியன், திங்கள் = நிலவு, அளி - குளிர்ச்சி).


தமிழ் தெய்வங்களை ஏற்கும் சிலர் தமிழ் தெய்வங்களை தம் முன்னோர், தலைவன் என்பதை அழுத்தமாகச் சொல்லி கடவுள் தன்மையைப் பின்னுக்குத் தள்ளுகின்றனர்.ஆனால் இப்பாடல்
மூலம் கடவுள் தன்மைக்கு நம் முன்னோர் தந்த முக்கியத்துவம் புலப்படும்.

மேலும் வடவர் திருமாலை 'விஷ்ணு' என்பர் அதன் பொருள் எங்கும்_நிறைந்தவர் என்பதாகும். எங்கும் நிறைந்திருக்கும் திருமாலின் தன்மையைத் தமிழன் தெளிவாக உணர்த்தியுள்ளான்.





Comments

Post a Comment

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்