சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம்-10 திருவாதிரை

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-10



சங்கத்தமிழர் கொண்டாடிய திருவிழாக்கள் பல அவற்றுள் முக்கியமானது மார்கழி திருவாதிரை ஆகும்.


அதை...

ஆசிரியர் நல்லுவந்தனார் பரிபாடல் 11ம் பாடலில் வையை என வைகை ஆற்றின் சிறப்பைக் கூறுகையில்

பரிபாடல்2:76-87
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப, ‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என- 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், -85

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின்
அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, -90

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று வேதமோதும் அந்தணர்கள் சிவபெருமானிற்கு திருவிழா செய்யத் தொடங்கினர்.
முப்புரி நூல் அணிந்த அந்தணர் பொன்கலத்தை ஏந்தி சென்றனர்.
அம்பா ஆடல் செய்யும் கன்னிப் பெண்கள்- முதிய அந்தணப் பெண்கள் வழிகாட்ட அதிகாலையில் நீராடினர். இளம்பெண்கள், மார்கழியின் குளிர் வாட்ட, கரையில் வேதமந்திரங்கள் கூறி வளர்த்த வேள்வி அக்னியின் அருகில் சென்று தங்கள் ஈர ஆடையை காயச் செய்தனர். அந்தணர் வேத வேள்விகளால் மழை தொடர வைகை நீ பெருகுகிறாய்.

இவை மார்கழி மாதத்தின் பாவை நோன்பின் தொன்மையையும் திருவாதிரை பண்டிகை கொண்டாடுதலின் வழமையையும் மெய்பிக்கின்றது.


தமிழர்தம் முக்கியத் தெய்வம் சிவபெருமான், வேதமோதுதல், வேள்வி வளர்த்தல், முப்புரி நூலணிந்த அந்தணர் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகளைக் கவனித்தால் ஆரிய- திராவிட வேற்றுமை என்பது கற்பனை என்று உணரலாம்.


Comments

Post a Comment

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்