சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம்-7 வேதம்

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-7

தமிழர் வேதசமயத்தவரே



சனாதனதர்மத்தின் மூலநூல் வேதங்கள் எனும் மறைநூலாகும். வேதங்களுக்கு நம் சங்கத்தமிழ் முன்னோர் தந்த முக்கியத்துவத்தைப் பின்வரும் பரிபாடல் கூறுகிறது.

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12

பூவினுள் பிறந்தோன்- பிரம்மா, திருமாலின் திருநாபிக் கமலத்தில் தோன்றிய பிரம்மன் என்ற புராணச் செய்தி, தமிழர் இந்து புராணங்கள் மேல் கொண்ட பற்றை விளக்குகிறது.

பொருள்:
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத
வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி

கோழியும்- உரையூர்- சோழ தலைநகர்

கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ.

உரை:

பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறார் சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர், ஆனால் சங்கத்தமிழ் வளர்த்த மதுரை மக்கள் நாங்களோ அந்தணர் ஓதும்  அருமறையின் தெய்வீக ஒலி கேட்டு எழும் பெருமைக்குரியவர்கள். வேத ஒலி கேட்டு எழும் திருஆலவாயின் பெருமையைக் கூறுகிறது இப்பாடல்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்