சங்கத்தமிழ் காட்டும் ஜோதிஷம்-16

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-16



வைகை வெள்ளத்திற்குக் ஜாதகம் கணித்த சங்கப்புலவன்.
ஜோதிட சாஸ்திரம் என்பது இந்துக்கள் வாழ்வியலில் இரண்டறக் கலந்ததாகும், இதன் அடிப்படையே வான சாஸ்திரம் ஆகும்.இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழர் கொண்டிருந்த வானவியல், ஜோதிட அறிவை பரிபாடலில் ஆசிரியர் நல்லந்துவனார் கூறுகிறார்.

விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப
எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து
தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளிவந்து ஏற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல்
அங்கி உயர்நிற்ப அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்குப் பால்எய்த இறையமன்
வில்லிற் கடைமகரம் ஏவப் பாம்பொல்லை
மதிய மறைய வருநாளில் வாய்ந்த
பொதியின் முனிவன் புரைவரைக் கீறி
மிதுனம் அடைய விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைக என இவ்வாற்றால்
புரைகெழு சையம் பொழிமழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்…

வைகையில் புதுவெள்ள வருகைக்கு ஜாதகம் கணித்திருக்கிறார் ஆசிரியர் நல்லந்துவனார். ஆற்று வெள்ளம் பயனுடையதாக இருக்குமா வேறு விதமாக இருக்குமா என்று தெரிந்துகொள்ள.

இப்பாடல் மிகவும் ஆராய்ச்சிக்குரியது... என்றாலும் நமக்கெட்டிய தமிழ், ஜோதிட அறிவை வைத்துப் பார்க்கும் போது...

இப்பாடல் புதன், வெள்ளி, அந்தணன்- வியாழன், இறையமன்- யமனை இறைவனாக உடைய சனிக்கோள், பாம்பொல்லை- சர்ப்ப கிரகங்களான இராகு, கேது ஆகிய கிரகங்களைக் காட்டுவதன் மூலம் பண்டையத் தமிழர் கொண்டிருந்த வானவியல் அறிவைக் காட்டுகிறது.

மேலும் அக்கிரகங்கள் வைகையில் புதுவெள்ளம் வரும்போது நின்ற வீடுகளான இராசிகளை ....விடை- ரிஷபம், மிதுனம், வில்-தனுசு, மகரம் ஆகியவற்றைக் காட்டுகிறது இப்பாடல் இதன் மூலம் ஜோதிட சாஸ்திரம் தமிழரது கண்டுபிடிப்பே என்று அறியலாம்.

சனாதனதர்மத்தைக் கடைபிடித்த தமிழர் உலகின் பல்வேறு வானியல் கண்டுபிடிப்புகளைச் செய்ததைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்