சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம்-4 -திருமால்

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-4

இந்துமதம் தமிழருடையதல்ல என்ற போலி வாதத்தை உடைக்கவே அடியேன் இத்தொடரே எழுதிவருகிறேன்.

இந்துமதத்தை அந்நியப்படுத்த நினைத்த சிலர் அம்முயற்சி தோற்றதால் எடுத்திருக்கும் புது அஸ்திரம் தான் சைவம் மட்டுமே தமிழர்சமயம் என்ற கருத்தாகும்.

இது உண்மையல்ல வைணவம், சைவம் மற்றும் பல்வேறு வேத கடவுளரையும் சங்கத்தமிழர் வணங்கி வந்தனர். ஆக, சங்கத்தமிழன் இந்துவே.

இதோ போன்ற குழப்பவாதிகளுக்காகவே தான் நம் முப்பாட்டன் முன்னரே பதிலடி கொடுத்துள்ளானோ..? இதோ..

பாரதம் பாடிய என்ற சிறப்பையும் பெயரோடு பெற்றிருக்கின்ற புலவர் பெருந்தேவனார்.

மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன், என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே

என நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்துப்பாடி, திருமாலை முழுமுதற் கடவுளாகக் காட்டுகின்றார். திருமால், ஐம்பெரும் பூதம், மதியம், சூரியன், திசை, இப்படி எல்லாம் அவன், அவனே உலகத்து உயிர், உயிர்கள் அனுபவிக்கும் பொருள், வேதத்தின் பொருள் எனவே அவனை வணங்குவோம் என்பர்.

எனவே நிலத்தை அவன் திருவடியாகவும் கடலை அவன் ஆடையாகவும், திசையை அவன் கை ஆகவும், சந்திரன் சூரியன் ஆகியவற்றை அவன் இரு கண்களாகவும் கண்டு உருவகப்படுத்தி உள்ளார். இறைவனையும்_இயற்கையையும் பிரித்தறிய முடியாது என்பது பொருள்.

சைவ_வைணவம்_வேதம்_உள்ளடக்கிய_சனாதனதர்மமே_தமிழர்_சமயம்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்