சங்கத்தமிழ் காட்டும் திருக்கார்த்திகை-15

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-15

திருக்கார்த்திகை தீபம்

இறைவனை ஒளிவடிவமாக காண்பது பாரத தேசத்திலிருந்தே பிறந்த வழக்கமாகும். வடக்கே தீபாவளி போல தமிழ்நாட்டில் கார்த்திகை.



திருக்கார்த்திகை திருவிழா பல்வேறு புராணப் பின்னணிகளை உடையது, அகநானூற்றில் வரும் இப்பாடல் பழந்தமிழர் கார்த்திகை விழா கொண்டாடியதைக் காட்டுகிறது.

மழைக்கால் நீங்கிய மாசறு விசும்பின்
குறுமுயல் மறுநிறம் கிளர் மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர’’ (அகம்., பா.எ., 141).

அக்னியை, தீப ஒளியை கடவுளாகக் காண்பது வேத உபநிஷதங்களிலும் உள்ள வழக்கமாகும்.

உபநிஷதங்களிலேயே மிகவும் பழையது #பிருஹதாரண்யக உபநிஷத்! அதில்“இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்” -- என்று வேண்டுகிறோம் (தமஸோ மா ஜோதிர் கமய).

ஆக, இன்றும் வடநாட்டில் குறிப்பாக காசியில் கார்த்திகை பௌர்ணமி தேவதீபாவளி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. ஜைன மதத்தவரும் இதைக் கொண்டாடுகின்றனர்.

அதனால் வடக்கு, தெற்கு என்ற பாகுபாடின்றி ஒட்டுமொத்த பாரததேசத்தில் கொண்டாடப் பெறும் கார்த்திகை திருவிழாவானது 2000 வருடங்களாக தொடர்ந்து நம் தமிழ் சான்றோர் கொண்டாடினர் என்பது உறுதியாகிறது.



மேலும்,காலங்காலமாக தீபத்தை வணங்கும் நாம் இன்று பிறந்தநாள்விழா என்ற பெயரில் மெழுகுவர்த்தி(மெழுகு என்பது விலங்கு கொழுப்பில் எடுக்கப்படுவது, எதிர்மறை அதிர்வு உடையது, ஆக, மெழுகுதீபம் தவிர்ப்போம்) ஏற்றி, வாயால் ஊதி தீபத்தை அவமதிக்கிறோம்... இந்த அந்நிய நாட்டுப் பழக்கத்தை கைவிட்டு இந்த கார்த்திகை திருநாள் முதல் பிறந்தநாள் விழாக்களை விளக்கேற்றி வணங்கிக் கொண்டாடுவோம்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்