விநாயகர் இந்து மதத்திற்கும், இந்தியாவுக்கும் மட்டுமே உரியவரா?

விநாயகர் இந்து மதத்திற்கும், இந்தியாவுக்கும் மட்டுமே உரியவரா?

இல்லை.... பௌதத்திலும், சமணத்திலும் அவருக்கு உயரிய இடம் உள்ளது.
கணேஷ சஹஸ்ரநாமமத்தில் புத்தா என்பதே விநாயகரின் பெயராக வருகிறது.
ஸ்வேதாம்பர ஜைனர்கள் கடவுளர்களுக்கே கடவுளாக விநாயகரைப் போற்றுகின்றனர்.
ரோமானிய கடவுளான ஜானஸ் (இருமுகம் உடையவர்) நமது விநாயகரின் ஒரு வடிவமான 'த்விமுக விநாயகரோடு' நெருங்கிய தொடர்பு உள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், சீனா, திபெத், மங்கோலியா, பர்மா, கம்போடியா, ஜாவா, சுமத்ரா, வியட்னாம் ஆகிய நாடுகளில் விநாயகர் இன்று வரை வணங்கப்படுகிறார்.
ஜப்பானில் 'காங்கிடென்' என்ற பெயரில் போற்றப்படுகிறார்.
இந்தோனேசியாவில் ரூபாய் நோட்டிலும், பல்கலைக்கழக முத்திரையில் அருளுகிறார்.
அகண்ட பாரத தேசத்தின் அடையாளமாக, பெரிதும் போற்றப்படும் தெய்வமாக நமது பிள்ளையார் விளங்குகிறார்.


.
விநாயகர் தடைகளை நீக்கும் கடவுளாக வணங்கப்படுகிறார்.
பாரத தேசம் மட்டுமின்றி அகண்ட பாரதத்திலும் தன் ஆதிக்கம் செலுத்துகிறார்.
இதோ தாய்லாந்து நாட்டில் உள்ள பிரமாண்டமான கணபதி சிலை.



இந்தோனேசியாவின் பாலித் தீவில் இன்றளவும் இந்துதர்மமே பின்பற்றப்படுகிறது.அதன் ஆதாரமான இன்றளவும் வழிபடப்படும் அழகிய விநாயகர்.



இந்துமதம் அகண்டபாரதம் முழுவதும் பரவி இருந்தது.
இதோ 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட விநாயகர் சிலையை வியட்நாமில் காணும்போது நமக்கு வியப்பே மேலிடுகிறது.


இந்தோனேசியாவின் பிரபானன் கோவில் மிகவும் புகழ்வாய்ந்த புராதன கோயிலாகும்.
இச்சிலை பிரபானன் கோவிலில் உள்ள விநாயகர் சிலை.



ஜப்பானில் குபேரன் மற்றும் சரஸ்வதிக்கு நடுவே தாமரை மலர் மீது யானை முகத்துடன் அமர்ந்திருக்கும் விநாயகர்
இங்கே அவர் பெயர் காங்கிடென்.


புகழ் பெற்ற அங்கோர்வாட் ஆலயம் அமையப் பெற்ற கம்போடியாவில் உள்ள அழகிய விநாயகர் சிலை.
திருமாலுக்குரிய சங்கு , சக்கரத்துடன் காட்சி தருவது வியப்பு!!!

இந்துமதத்திலிருந்து புத்தமதத்திலும் விநாயகர் வழிபாடு பரவியது.
ஆக காங்கிடென் என்ற பெயரில் சீனா , ஜப்பான் நாடுகளில் இந்து- பௌத கடவுளாக வழிபடப்படுகிறார்.


இராமாயணத்தில் யாவத்வீபம் எனக் குறிப்பிடப்படும் ஜாவாத் தீவுகளில் இந்துக் கலாசாரம் பெரும் உயிரோட்டத்துடன் உள்ளது.
இதோ அங்குள்ள அழகிய ஆனைமுகன் சிலை.

சிவந்த நிறமும், நெற்றிக்கண்ணும் உடைய சற்றே வித்தியாசமான விநாயகர் ஓவியம்.
அன்றைய அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியான இன்றைய திபெத்தில் காணப்படுகிறது.

இது ஆப்கானிஸ்தானில் கண்டுடெகுக்கப்பட்ட விநாயகர் சிலை. காலம் கி.பி 5ம் நூற்றாண்டு. 




Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்