சங்கத்தமிழில் அணுக் கொள்கையும் ஆன்மிகமும் - 18

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-18

அணுக்கொள்கையை வகுத்தவன் தமிழனே!!! இதோ ஆதாரம்.

திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து அகன்றோடி
நின்னஞ்சிக் கடற்பாய்ந்த பிணிநெகிழ்பு அவிழ்தண்தார்
அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால் பகைவர் இவர், இவர் நட்டோர் என்னும்
வகையும் உண்டோ, நின் மரபறி வோர்க்கே?
(பரிபாடல்-55).

பொருள்- திரண்ட அணுக்கூட்டங்களால் ஆனது இந்த உலகம். இதனை நீ (திருமால்) உன் திருவடியால் முன்னொரு காலத்தில் அளந்தாய் (வாமன அவதாரம்). உன் உருவைக் கண்டு கலங்கிய அவுணர் (அசுரர்கள்) சிதறி ஓடினர், அவர்களுள் உன்னைச் சரணடைந்தோர்க்கும் நீயே முதல்வன் ஆகிறாய். அதனால், உனக்குப் பகை என்பதும், நட்பென்பதும் கிடையாது. இதனை உனது மரபை அறிந்தோர் நன்றாக அறிவர்.



தெளிவுறை:
இறைவன் என்பவன் அனைவருக்கும் முதலானவன், பொதுவானவன். அவன் தன்னைச் சரணடைந்தோரைக் காப்பான். அதாவது தீய குணமுள்ள அரக்கர்களைப் போன்ற மனிதராயினும் தம் தவறுணர்ந்து இறைவனிடம் சரணடைந்தால், அவன் தீயோரையும் நல்லோராக்கிக் காப்பான் என்ற சனாதனதர்மக் கருத்தை இப்பாடல் நிறுவுகிறது.

மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பரிபாடலில் மிகவும் பழக்கப்பட்டது போன்று சாதாரணமாக அணுக்களால் ஆனது இந்த உலகம் என்று தமிழன் சொல்லிச் சென்றுள்ளான் என்பதைக் கண்டால் அக்காலத்திலேயே ஆதியில் அணுக்கொள்கையை வகுத்தவன் தமிழனே என்பதையும் அறியலாம்.

விஞ்ஞானமும், மெய்ஞானமும் கலந்து செவிகளுக்கு விருந்தாகிறது இப்பாடல்.


Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்