சங்கத்தமிழ் காட்டும் மதுரையின் வடிவம்-14

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-14

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமையை உடையது மதுரை மாநகராகும். இன்றளவும் தமிழகத்தின் கலாசாரத் தலைநகரமாக இருப்பது மதுரையே!!!



அத்தகைய சிறப்பினை உடைய மதுரையின் தாமரை வடிவத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பே சங்கத்தமிழ்ப்புலவர் பரிபாடலில் இவ்வாறு பாடுகிறார்.

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத் தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்

பொருள்-
 மதுரைநகரம் திருமாலின் உந்தியின்மலர்ந்த தாமரை மலரை போன்றுள்ளது. அந்நகரத்துள்ள தெருக்கள் அம்மலரின் இதழ்களை போன்றுள்ளது; பாண்டியன் அரண்மனை அம்மலரகத்துள்ள பொகுட்டை போன்றுள்ளது.



நாம் அறிந்துகொள்வது-
பார்க்கின்ற அனைத்திலும் பரம்பொருளைப் பார்ப்பதே நம் பாரதப் பண்பாடாகும். தான் வாழ்கின்ற ஊரின் வடிவத்தையே இறை அம்சம் பொருந்தியதாகப் பார்க்கின்ற இப்பண்பு சனாதனதர்மத்திற்கு மட்டுமே உரியது என்பதை உணர்ந்தால் சங்கத்தமிழரின் சமயம் சனாதனமே என உணரலாம். மேலும் இப்பாடல் மூலம் திருமால் தமிழரது தெய்வமே என்று நிறுவலாம்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்